K.B.சதீஸ்
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று (31) மாலை அந்தப்பகுதிக்கு சென்ற ஆயுதம் தாங்கிய குழு ஒன்று அவரைத்தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவரது உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, ஒரு கை முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டனர்.
குறித்த சம்பவத்தில் ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த 30 வயதான ரஞ்சா என்று அறியப்பட்ட யோன்சன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். .
இந்நிலையில், சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM