சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றில் ஆற்றவுள்ள விசேட உரையில் தெளிவுபடுத்துவார் : பிரதமர் தினேஷ் குணவர்தன

By Vishnu

31 Jul, 2022 | 09:45 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 3 ஆம் திகதி பாராளுமன்றில் ஆற்றவுள்ள விசேட உரையில் தெளிவுப்படுத்துவார்.

தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக்கொள்ள சகல தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

தலதா மாளிகையில் 31 ஆம் திகதி மதவழிபாட்டில் ஈடுப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் அங்கம் வகிக்கம் சகல அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் நாட்களில் உத்தியோகப்பூர்வமான பேச்சவார்த்தையை முன்னெடுப்பார். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி 03 ஆம் திகதி பாராளுமன்றில் ஆற்றவுள்ள விசேட உரையின் போது தெளிவுப்படுத்துவார். நாடு என்ற ரீதியில் சகல தரப்பினரும் தற்போதைய நிலையில் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.

சகல நாடுகளுடன் நட்பு ரீதியாகவும்,வெளிப்படைத்தன்மையுடனும் செயற்பட எதிர்பார்த்துள்ளோம்.பொருளாதார மீட்சிக்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி இலங்கையில் உள்ள இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்ரதைகளை மேற்கொண்டுள்ளார்.அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு உண்டு.

நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டே சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.அரச நிர்வாகத்தை முறையாக முன்னெடுத்து செல்வது அவசியமாகும்.நீதிமன்றத்தின் அதிகாரத்தை எவருக்கும் தன்வசப்படுத்த முடியாது.வன்முறையான சம்வங்களை மாத்திரம் முடக்கியுள்ளோம்.ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் மின்சாரம் தாக்கி இராணுவ வீரர்...

2023-01-28 12:38:19
news-image

யாழில் தாய்ப் பால் புரைக்கேறி 30...

2023-01-28 12:43:32
news-image

மட்டு கரடியனாற்றில் 16 மாடுகள் கடத்தல்...

2023-01-28 12:13:02
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள வசந்த...

2023-01-28 12:06:00
news-image

தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி சுதந்திரதினத்தன்று யாழிலிருந்து...

2023-01-28 11:38:21
news-image

3 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடமையாக்கப்பட்டன

2023-01-28 11:21:37
news-image

வாழைச்சேனையில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கண்டன...

2023-01-28 11:38:57
news-image

பாதுகாப்பு, செழிப்பினை தொடர்ந்தும் முன்னேற்ற நாங்கள்...

2023-01-28 11:07:07
news-image

மீற்றர் வட்டி விவகாரம் ; மேலும்...

2023-01-28 11:00:53
news-image

தேர்தல் முடியும்வரை புதிய ஆணைக்குழு அமைப்பதை...

2023-01-28 10:49:46
news-image

சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகில்...

2023-01-28 10:55:50
news-image

இக்கட்டான நிலைமையில் ஒத்துழைப்பு வழங்கிய இந்திய...

2023-01-28 10:26:02