பத்தனை சந்தி கடைத்தொகுதி தொடர்பில் நிலவும் மர்மங்கள் : தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக பெறப்பட்ட தகவல்கள்

Published By: Vishnu

31 Jul, 2022 | 07:37 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

கொட்­ட­கலை பிர­தேச சபையின் நிர்­வாகப் பிரி­வுக்குள் அமைந்­துள்ள பத்­தனை சந்­தியில் அமைக்­கப்­பட்­டி­ருக்கும் கடைத்­தொ­குதி தொடர்பில்  தொட ர்ந்தும் மர்­மங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. இக்­கட்­டி­ட­மா­னது  யாரு­டைய அனு­ம­தி­யுடன் இங்கு அமைக்­கப்­பட்­டது, அமைத்­த­வர்கள் யார் என்­பது குறித்து இது வரை தெளி­வான தக­வல்­களை வழங்க  எவரும்  முன்­வ­ர­வில்லை.

இவ்­வி­டத்தில் ஒரு கடைத்­தொ­கு­தியை மக்கள் நல­னுக்­காக அமைக்க ஆரம்­பத்தில் சமூர்த்தி  அதி­கார சபை ஊடாக சமூர்த்தி பிரஜா சங்­கத்­தினர்  மேற்­கொண்ட முயற்­சி­களை ஆதா­ரங்­க­ளுடன் நாம் வீர­கே­சரியில் வெளியிட்டிருந்தோம். அதை­ய­டுத்து மறு நாள் திங்­கட்­கி­ழமை இக்­க­டைத்­தொ­கு­திக்கு முன்­பாக பிர­தே­சத்தைச் சேர்ந்த சமூர்த்தி பய­னா­ளிகள்  கவ­ன­யீர்ப்பு ஆர்ப்­பாட்­ட­மொன்றை மேற்­கொண்­டி­ருந்­தனர். 

தாம் சமூர்த்தி நலன்­களை பெறு­வ­தற்கு காலத்­தையும் பணத்­தையும் வீணாக்கி தல­வாக்­கலை வரை பய­ணித்­துக்­கொண்­டி­ருப்­ப­தா­கவும் இது தமது நல­னுக்­காக அமைக்­கப்­பட்ட கடைத்­தொ­குதி என்றால் அதை தமது பயன்­பாட்­டுக்கே தரப்­படல் வேண்டும் என்றும் இதில்  அர­சியல் தலை­யீ­டுகள் இருப்­ப­தா­லேயே இன்னும் திறக்­கப்­ப­டாமல் மூடி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்றும் அவர்கள் கூறினர். 

இச்­சந்­தர்ப்­பத்தில் இது கடைத்­தொ­குதி குறித்து நாம் தகவல் அறியும் சட்­ட­மூலம் ஊடாக கொட்­ட­கலை பிர­தச சபை­யிடம் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு பதில்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. எனினும் வழங்­கப்­பட்ட பதில்­களில் தெளி­வின்­மையும் முரண்­களும் உள்­ளதை இங்கு சுட்­டிக்­காட்டல் அவ­சியம்.  மேற்­படி விவ­காரம் தொடர்பில் நாம் எழுப்­பி­யி­ருந்த கேள்­விகள் இவ்­வாறு இருந்­தன,

மேற்­படி கடைத்­தொ­குதி கொட்­ட­கலை பிர­தேச சபைக்­கு­ரி­யதா?

குறித்த கடைத்­தொ­குதி அமை­யப்­பெற்­றுள்ள காணி பிர­தேச சபைக்­கு­ரி­யதா?

எந்த அடிப்­ப­டையில் எந்த காலப்­ப­கு­தியில் மேற்­படி காணி பிர­தேச சபையின் அதி­கா­ரத்­துக்குள் வந்­தது?

குறித்த காணி  பிர­தேச சபைக்­கு­ரி­யது இல்லை என்றால், அது யாருக்கு உரித்­து­டை­யது?

இங்கு கடைத்­தொ­குதி அமைப்­ப­தற்கு பிர­தேச சபையின் அனு­மதி பெறப்­பட்­டதா?

6) கடைத்­தொ­கு­தியின் நிர்­மா­ணப்­ப­ணி­களை முன்­னெ­டுத்த ஒப்­பந்­தக்­கா­ரர்கள் யார்?

7) குறித்த காணியோ அல்­லது கடைத்­தொ­கு­தியோ கொட்­ட­கலை  பிர­தேச சபைக்கு சொந்­த­மா­னது இல்லை என்றால் அது எந்த உள்­ளூ­ராட்சி சபையின் கீழ் வரு­கின்­றது?

8) யாரு­டைய அனு­ம­தியும் இன்றி இக்­க­டைத்­தொ­குதி அமைக்­கப்­பட்­டி­ருந்தால் அது சட்ட விரோத கட்­டி­டமா?

மேற்­கு­றிப்­பிட்ட கேள்­வி­க­ளுக்கு கொட்­ட­கலை பிர­தேச சபையால் வழங்­கப்­பட்ட பதில்கள் இவ்­வாறு அமைந்­துள்­ளன. 

1,2) கடைத்­தொ­கு­தியும் அது அமைந்­துள்ள காணியும் கொட்­ட­கலை பிர­தேச சபைக்கு சொந்­த­மா­னதில்லை. 

3) 2043/57 ஆம் இலக்க விசேட வர்த்­த­மானி ஊடாக 20/03/2018 ஆம் திகதி உரு­வாக்­கப்­பட்ட கொட்­டலை பிர­தேச சபையின் அதி­கார பிரிவில்  இவ்­விடம் அமைந்­துள்­ளதால் சபையின் அதி­கார எல்­லைக்குள் வந்­தது.

4) குறித்த காணி அவ்­வி­டத்தில் அமைந்­துள்ள ஆலய பரி­பா­லன சபையால் பாரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

5) கடைத்­தொ­குதி ஒன்றை அமைப்­ப­தற்கு கொட்­டலை பிர­தேச சபை­யினால் யாருக்கும் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை.

6) கடைத்­தொ­கு­தியை அமைப்­ப­தற்கு பிரதே சபை­யுடன் எவரும் ஒப்­பந்தம் செய்­ய­வில்லை.

7) இக்­காணி கொட்­டலை பிரதே சபைக்கு சொந்­த­மா­னது இல்லை என்­றாலும் சபையின் அதி­காரப் பிரிவில் அமைந்­துள்­ளது.

8) இந்த கடைத்­தொ­கு­திக்­கான அனு­மதி பத்­திரம் நுவ­ரெ­லியா பிரதே சபை­யினால் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. 

இந்த பதில்­க­ளி­லி­ருந்து நாம் சில முடி­வு­க­ளுக்கு வரலாம். 

• அதா­வது குறித்த காணி கொட்­டலை பிர­தேச சபைக்கு சொந்­த­மா­ன­தாக இல்­லை­யென்ற போதிலும் அது மேற்­படி பிர­தேச சபையின் நிர்­வாக எல்­லைக்குள் வரு­கின்­றது. ஆகவே எந்த வெளித்­த­ரப்­பி­னரும் பிர­தேச சபையை அணு­காமல் ஒரு கட்­டி­டத்தை அமைப்­ப­தற்கு நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் சட்­டத்தின் பிர­காரம் அனு­ம­தி­யில்லை. அப்­படி அமைக்­கப்­பட்­டி­ருந்தால் அது சட்­ட­வி­ரோத கட்­டி­ட­மாகக் கரு­தப்­படல் வேண்டும். அதற்கு எதி­ராக பிர­தேச சபை வழக்கு தொட­ரலாம்.

•  நுவ­ரெ­லியா பிர­தேச சபை­யா­னது கொட்­டலை பிர­தேச சபை , அக்­க­ர­பத்­தனை பிர­தேச சபை, நுவ­ரெ­லியா பிர­தேச சபை  என மூன்­றாகப் பிரிக்­கப்­பட்­டது.  அதன் படி அதன் நிர்­வாக எல்­லைக்குள் இருந்த மேற்­படி பிர­தேசம் கொட்­ட­கலை பிர­தேச சபையின் வச­மா­னது. இதை கொட்­ட­கலை  பிர­தேச சபையே தனது பதிலில் குறிப்­பிட்­டுள்­ளது.  ஆகவே நுவ­ரெ­லியா பிதேச சபையின் காலத்தில் அவர்கள் மேற்­கொண்ட சகல நட­வ­டிக்­கை­க­ளையும் தற்­போது கொட்­ட­கலை பிர­தேச சபையே கொண்­டுள்­ளது. 

• குறித்த காணி அவ்­வி­டத்தில் அமைந்­துள்ள ஆலய பரி­பா­லன சபை­யி­னரால் பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­வ­தாக பதில் தரப்­பட்­டுள்­ளது. குறித்த ஆல­யத்­துக்கு இது நாள் வரை எந்த நிர்­வாக சபை­களும் தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­க­வில்­லை­யென்­பதே உண்மை. ஏனென்றால் அந்த ஆலயம் இது வரை பதிவு செய்­யப்­ப­ட­வில்லை. அது டெவன் மற்றும் கிரேக்­கிலி தோட்­டத்தின் எல்­லையில் அமைந்­துள்­ளது. இது வரை காலமும் நிர்­வாக சபை இல்­லாத கார­ணத்­தி­னாலும் இந்த கடைத்­தொ­கு­தியை அமைத்தத் தரப்­பினர் அது ஆல­யத்­துக்கு உரி­யது என்­பதை மக்­க­ளிடம் காட்­டு­வ­தற்­கா­கவும் மேற்­கொண்ட நட­வ­டிக்­கையின் ஒரு அங்­க­மாக, கடந்த 25/07/2022 திங்­கட்­கி­ழ­மை­யன்று முதன் முறை­யாக ஒரு நிர்­வாக சபையை அமைப்­ப­தற்கு நுவ­ரெ­லியா மாவட்ட செய­லா­ள­ரினால் குறித்த ஆலயம் அமைந்­துள்ள கிராம சேவகர் பிரி­வுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்­தது. ஆகவே இதன் மூலம் இதற்கு முன்­ப­தாக இந்த ஆல­யத்­துக்கு ஒரு நிர்­வாக சபை இருந்­தி­ருக்­க­வில்­லை­யென்­பது உறு­தி­யா­கின்­றது. இது குறித்து கொட்­டலை பிர­தேச சபை ஏன் தேடிப்­பார்க்­க­வில்­லை­யென்­பது தெரி­ய­வில்லை.

• அக்­கடைத் தொகு­தியை அமைப்­ப­தற்கு கொட்­ட­கலை பிர­தேச சபை அனு­மதி வழங்­க­வில்­லை­யென பதில் தரப்­பட்­டுள்­ளது. அப்­ப­டி­யாயின் தமது நிர்­வாக எல்­லைக்குள் வரக்­கூ­டிய குறித்த பிர­தே­சத்தில் கடந்த இரண்டு வருட கால­மாக யாரோ  நிர்­மா­ணப்­ப­ணி­களை முன்­னெ­டுத்து வந்­தமை குறித்து கொட்­ட­கலை பிரதே சபையின் நிர்­வாகம் உட்­பட , இது குறித்து தேடிப்­பார்க்கும் பொறுப்பை கொண்­டுள்ள தொழில்­நுட்ப உத்­தி­யோ­கத்தர் (T.O) மற்றும் வரு­மான வரி பரி­சோ­தகர் ( R.I) ஆகிய தரப்­பி­ன­ருக்கு இது தெரி­யா­ம­லி­ருந்­தமை ஆச்­ச­ரி­யமே. மேலும் அனு­மதி வழங்­கப்­ப­டாமல் அமைக்­கப்­படும் எந்­த­வொரு கட்­டி­டத்­துக்கு எதி­ரா­கவும் சட்ட நட­வ­டிக்கை எடுக்க  1982 ஆம் ஆண்டின் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை சட்­டத்தின் 8 ஏ (1) பிரிவின் கீழ் உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு அதி­காரம் உள்­ளது. 

• குறித்த கடைத்­தொ­கு­திக்­கான கட்­டிட அனு­மதி பத்­தி­ரத்தை 2008 ஆம் ஆண்டு நுவ­ரெ­லியா பிரதே சபை வழங்­கி­யுள்­ள­தாக  பதில் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் அனு­மதி பத்­திர ஆவணம் இணைக்­கப்­ப­ட­வில்லை. எனினும் இது குறித்து நாம் பிர­தேச சபை தவி­சா­ள­ரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது 2008 ஆம் ஆண்டு அப்­போ­தைய தவி­சாளர் மேற்­படி ஆலய பரி­பா­லன சபை­யினர் முன்­வைத்து கட்­டிட வரை­புக்கு ( Building Plan) அனு­மதி அளித்து கையொப்பம் இட்­டி­ருப்­ப­தாக கூறி­யி­ருந்­த­துடன் அந்த வரைபு பிரதி ஒன்­றையும் அனுப்­பி­யி­ருந்தார். இந்த இறுதி பதில்கள் மூலம் எமக்கு பல கேள்­விகள் எழு­கின்­றன. 

1) ஆல­யத்­துக்கு புதிய பரி­பா­லன சபையை தெரிவு செய்ய   2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக திகதி அறி­விக்­கப்­பட்­டி­ருந்த  நிலையில், 2008 ஆம் ஆண்டு மேற்­படி ஆலய பரி­பா­லன சபை­யினர் என இவ்­வி­டத்தில் கட்­டிடம் அமைப்­ப­தற்கு அப்­போ­தைய தவி­சா­ளரை அணு­கிய தரப்­பினர் யார்? 

2) ஆலயம் இது வரை பதிவு செய்­யப்­ப­ட­வில்லை. காரணம் அங்கு ஒரு நிர்­வாக சபை இருந்­தி­ருக்­க­வில்லை. ஒரே ஒரு பூசகர் மாத்­தி­ரமே ஆல­யத்தை நிர்­வ­கித்து வரு­கிறார். அப்­ப­டி­யாயின் அப்­போ­தைய தவி­சாளர் ஏமாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றாரா? அல்­லது அவர் அது குறித்து தேடிப்­பார்க்­க­வில்­லையா?

3) 2008 ஆம் ஆண்டு அப்­போ­தைய நுவ­ரெ­லியா பிர­தேச சபையால் அனு­மதி வழங்­கப்­பட்ட கட்­டிட வரைபை பயன்­ப­டுத்தி  14 வரு­டங்­க­ளுக்­குப்­பி­றகு  இப்­போ­தைய கொட்­ட­கலை பிர­தேச சபையின்  நிர்­வாக எல்­லைக்குள் இந்த கடைத்­தொ­கு­தியை சட்­ட­ரீ­தி­யாக அமைக்க முடி­யுமா என்ற கேள்வி ஏன்  கொட்­ட­கலை பிர­தேச சபைக்கு எழ­வில்லை? ஏனெனில் ஒரு கட்­டி­டமோ குடி­யி­ருப்போ அமைப்­ப­தற்கு குறித்த உள்­ளூ­ராட்சி சபை­யிடம்  அனு­மதி பெறும் போது அதற்­கான அனு­மதி பத்­தி­ரத்தின் பெறு­மதி மூன்று வரு­டங்கள் மாத்­தி­ரமே என நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் சட்டம் கூறு­கின்­றது. 

ஆகவே இதன் பின்­ன­ணியில் உள்ள மர்­மங்­களை கொட்­ட­கலை பிர­தேச சபையே தெளி­வு­ப­டுத்த வேண்­டி­ய­ கட்­டா­யத்தில் இருக்­கின்­றது. மேலும் கடைத்­தொ­குதி சட்­ட­வி­ரோ­த­மாக கட்­டப்­பட்­டுள்­ளது என்­ப­தற்கு  இதை விட வேறு ஆதா­ரங்கள் தேவை­யில்லை. ஆனாலும் இக்­க­டைத்­தொ­கு­தியை அருகில் உள்ள ஆல­யத்தின் சொத்­தாக மாற்­று­வ­தற்கு சில தரப்­பினர் முயன்­றுள்ள அதே வேளை அவ­சர அவ­ச­ர­மாக நிர்­வாக சபையை உருவாக்கும் முயற்­சிகள் இடம்­பெற்­றுள்­ளன.

ஆலய நிர்வாக சபை தெரிவுக்கு எதிர்ப்புகள்  

இதற்­கான அறி­வித்தல் கடந்த 21/07/2022 அன்று பத்­தனை பிர­தேச மக்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­ட­தோடு கூட்டம் இடம்­பெறும் திக­தி­யாக 25 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. எனினும் மக்கள் பங்­கு­பற்­று­த­லுடன் இடம்­பெறும் சங்க கூட்­டங்கள் மற்றும் ஆலய நிர்­வாக சபை புதிய கூட்டங்களை நடத்துவதற்கு ஆகக்குறைந்தது 14 நாட்கள் அறிவித்தலே பின்பற்றப்படல் வேண்டும். இது குறித்து நாம் ஆராய்ந்து பார்த்ததில் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலின் படியே உடனடியாக இக்கூட்டத்தை நடத்துவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் மாவட்ட செயலக அதிகாரிகளுக்கும் அரசியல் அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டனவா என்ற சந்தேகமும் இங்கு எழுகின்றது. ஆனால் குறித்த தினத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், ஆலயம் அமைந்துள்ள தோட்டப்பிரிவு மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அங்கு எந்த தெரிவும் இடம்பெறவில்லை. 

 எனவே இந்த கடைத்தொகுதிக்கும் அருகில் அமைந்துள்ள ஆலயத்துக்கும் எந்த தொடர்புகளும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. இந்து கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத ஆலயத்துக்கு நிர்வாக சபை ஒன்றும் இருப்பதற்கு சந்தர்ப்பங்கள் இல்லை. நிர்வாக சபை ஒன்று இல்லாத ஆலயத்துக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன என்பதை தீர்மானிப்பது யார்? ஆகவே குறித்த கடைத்தொகுதியின் பின்னணியில் ஒரு பெரிய அரசியல் நாடகம் அரங்கேறியுள்ளமையை இப்பிரதேச மக்கள் தற்போது உணர்ந்து கொண்டுள்ளனர். சமூர்த்தி பயனாளிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தை யாரோ மூன்றாம் தரப்பினர் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றனர். இவ்வளவு சம்பவங்களுக்கு பிறகும் அரச அதிகாரிகள் இந்த சட்டவிரோத கடைத்தொகுதி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்காமலிருப்பதுவும் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளமை முக்கிய விடயம்.

நடவடிக்கை எடுக்கப்படுமா? 

கொட்­ட­கலை பிர­தேச சபை நிர்­வாகம் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் கீழ் உள்­ளது. சபையின் நிர்­வாக பிர­தே­சத்­துக்­குட்­பட்ட ஒரு இடத்தில் இனந்­தெ­ரி­யா­தோரால் அமைக்­கப்­பட்ட இக்­க­டைத்­தொ­குதி குறித்து பிர­தேச சபை­யா­னது சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளா­ம­லி­ருப்­ப­தற்கு அர­சியல் ரீதி­யான அழுத்­தங்கள் எதுவும் உள்­ள­தா  என்ற சந்­தே­கமும் எழுந்­துள்­ளது. இது குறித்து இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்­ட­மா­னிடம் நாம் வின­விய போது,   இந்த கடைத்­தொ­குதி யாரால் அமைக்­கப்­பட்­டது என்­பது குறித்து ஆராய்ந்து உட­ன­டி­யாக அறிக்கை சமர்ப்­பிக்கும் படி தான் உரிய தரப்­பி­ன­ரிடம் கேட்டுள்ளதாகவும்  மேலும் இது தொடர்பில் தான் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் ஜீவன் தொண்­டமான் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ராமேஷ்­வரன் ஆகி­யோ­ரு­டனும் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தா­கவும்,  குறித்த கடைத்­தொ­குதி சட்­ட­வி­ரோ­த­மாக அமைக்­கப்­பட்­டி­ருந்தால் அதை அகற்­று­வ­தற்­கு­ரிய வழி­வ­கை­களை  அவர்கள் ஆராய்­வ­தா­க தன்னிடம் தெரி­வித்­த­தா­கவும் கூறினார். 

நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டம் என்ன கூறுகின்றது? 

உள்­ளூ­ராட்சி சபை­களின் எல்­லை­களில்  அல்­லது அதன் நிர்­வாக அல­குக்குள்  வரக்­கூ­டிய பகு­தி­களில் ஒரு கட்­டி­டத்­தையோ அல்­லது குடியிருப்பையோ  அமைப்­ப­தற்கு என்ன நடைமுறைகள் என்பதை  நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க சட்­டம் கூறுகின்றது. எனினும் இதில்  2021 ஆம் ஆண்டு திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. ஆனால் சட்­ட­வி­தி­களில் மாற்­றங்கள் இல்லை. கட்­ட­ணங்­களில் மாத்­தி­ரமே திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.  2021 ஆம் ஆண்டு அப்­போ­தைய பிர­த­ம­ராக இருந்த மஹிந்த ராஜ­பக்ச, நகர அபி­வி­ருத்தி மற்றும் வீட­மைப்பு அமைச்சை தன் வசம் கொண்­டி­ருந்த போது, 08/07/2021 அன்று விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம்   திருத்­தங்­களை மேற்­கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. அதன் படி, இதன் 29 ஆவது பிரிவு கூறு­வது என்­ன­வென்றால்,

ஒரு கட்­டி­டமோ, குடி­யி­ருப்போ அமைப்­ப­தற்­கான விண்­ணப்பம்,  விண்­ணப்­ப­தா­ரியால் உரிய முறையில் நிரப்­பப்­பட்டு அதன் தொழில்­நுட்ப ரீதி­யான முன்­மொ­ழி­வுகள்   தெளி­வாக குறிப்­பி­ட்டிருக்க வேண்டும்.  பின்னர் திட்­ட­மிடல் குழுவின்  (Planning Committee) பரி­சீ­ல­னைக்குப் பிறகே அதற்­கான அபி­வி­ருத்தி அனு­மதி  பத்­திரம் (Development Permit) வழங்­கப்­படும்.  பிரிவு  30 இன் உப சரத்­துகள் இவ்­வாறு உள்­ளன, 

அபி­வி­ருத்தி அனு­மதி பத்­தி­ர­மா­னது ஒரு வரு­டத்­திற்கே செல்­லு­ப­டி­யாகும்.

குறித்த கட்­டி­டமோ குடி­யி­ருப்போ, ஒரு வருட காலத்­துக்குள் பணிகள் ஆரம்­பிக்­கப்­ப­டா­விட்டால் அல்­லது பூர்த்­தி­யாக்­கப்­ப­டா­விட்டால், அனு­மதி வழங்­கிய தரப்­பி­ன­ருக்கு ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க கார­ணங்­களை விண்­ணப்­ப­தாரி  உரிய முறையில் முன்­வைக்கும் போது அந்த அனு­மதி பத்­தி­ரத்தை ஆகக்­கூ­டி­யது இரண்டு வரு­டங்­க­ளுக்கு நீடிக்­கலாம். 

இந்த கால­கட்­டத்­துக்குள் மேற்­படி அனு­மதி பத்­தி­ரத்தை புதுப்­பிக்க வேண்­டு­மாயின் உரிய தரப்­பி­னரின் கண்­கா­ணிப்பு அறிக்­கையை பெற்று அதற்­கான படி­வத்தை சமர்ப்­பிப்­பது மட்­டு­மல்­லாது அதற்­கான உரிய கட்­ட­ணங்கள் செலுத்­தப்­படல் வேண்டும்.

4) மூன்று வரு­டங்­க­ளுக்­குப்­பி­றகு அபி­வி­ருத்தி அனு­மதி பத்­திரம் காலா­வ­தி­யா­ன­தாகக் கரு­தப்­படும்.  

பத்தனை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி யாருக்கு சொந்தமானது ?

https://www.virakesari.lk/article/132091

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22