(இராஜதுரை ஹஷான்)
எரிவாயு விநியோகத்தை கட்டம் கட்டமாக வழமைக்கு கொண்டு வருவோம் என நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறதியை நிறைவேற்றியுள்ளோம். இனிவரும் நாட்களில் நாளாந்தம் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
எரிவாயு விநியோக கட்டமைப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எரிவாயு விநியோகத்தை கட்டம் கட்டமாக வழமைக்கு கொண்டு வருவோம் என நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறதியை நிறைவேற்றுயள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். கடந்த மாதம் மாத்திரம் சந்தைக்கு சுமார் 20 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில் நாளாந்தம் 1 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானித்துள்ளோம்.அத்துடன் எதிர்வரும் 4மாத காலத்திற்கு எரிவாயு விநியோக கட்டமைப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.
நுகர்வோர் கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டரை விற்பனை செய்யும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு உரிய தரப்பினரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM