நல்லூரான் மீது பாடப்பட்ட திருநல்லூர்த் திருப்புகழ் வெளியீட்டு நிகழ்வு

By Vishnu

31 Jul, 2022 | 05:19 PM
image

யாழ்ப்பாணம் இருபாலையூர் தவ.தஜேந்திரனால் நல்லூரான் மீது பாடப்பட்ட திருநல்லூர்த் திருப்புகழ் வெளியீட்டு நிகழ்வும் இசை அர்ப்பணமும் 30 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.

செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் தலைமையில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருநல்லூர்த் திருப்புகழ் வெளியீட்டு நிகழ்வும் இசை அர்ப்பணமும் இடம்பெற்றது.

திருநல்லூர்த் திருப்புகழ் நூலை பேராசிரியர் நா. சண்முகலிங்கன் வெளியீட்டுவைக்க முதல்பிரதியை வாழ்நாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை பெற்றுக்கொண்டார்.

திருநல்லூர்த் திருப்புகழ் இசைத்தொகுப்பை யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராஜா வெளியிட்டுவைக்க யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பெற்றுக்கொண்டார்.

இறுதியாக திருநல்லூர்த் திருப்புகழ் தொகுப்பை உருவாக்க பங்களித்தவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் திருநல்லூர்த் திருப்புகழ் இசை அர்ப்பணமும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராஜா, யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்களான பொன். பாலசுந்தரம்பிள்ளை, நா.சண்முகலிங்கன், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், கவிஞர் சோ.பத்மநாதன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right