அதிகாரத்தை, அரச கட்டிடங்களை கைப்பற்ற வன்முறை, ஜனநாயகவிரோத வழிமுறைகளை பயன்படுத்தும் கட்சிகள், குழுக்கள் தடை செய்யப்படலாம் - அரச அதிகாரி

By Rajeeban

31 Jul, 2022 | 11:09 AM
image

அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அல்லது அரச கட்டிடங்களை கைப்பற்றுவதற்கு வன்முறை ஜனநாயகவிரோத வழிமுறைகளை பின்பற்றும் எந்த குழுவும் அரசியல் கட்சியும் அமைப்;பும் தடை செய்யப்படலாம் என சிரேஸ்ட அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக மீண்டுமொரு முறை 9 ம் திகதி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு சில குழுக்கள் திட்டமிட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே தடை குறித்து தீவிரமாக ஆராயப்படுகின்றது.

அரசாங்க கட்டிடங்களை கைப்பற்றுவதற்கு ஆக்கிரமிப்பதற்கான சேதப்படுத்துவதற்கான  முயற்சிகள் பயங்கரவாத நடவடிக்கையாக கருதப்படும் என அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் கட்சி அல்லது குழு அல்லது அமைப்பை தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த சட்டஆலோசனையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது.

கடுமையான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம் ஆனால் இது அமைதியான ஆர்ப்பாட்டங்களை  பாதிக்காது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இந்த வாரம் அனுமதிவழங்கியதை தொடர்ந்து அவசரகால சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது அது 18 ம் திகதி வரை நீடிக்கும்.

ஜூலை 9 முதல் 13 ம் திகதி வரையில் வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ள நிலையிலேயே தடை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

வன்முறைகள் சொத்துக்களிற்கு சேதம் விளைவித்தல் உத்தியோகபூர்ல இல்லங்களில் திருட்டு போன்றவற்றில் ஈடுபட்ட 40 பேரின் படங்களுடன் கூடிய விபரங்களை எதிர்வரும் நாட்களில் வெளியிடவுள்ள அதிகாரிகள் அவர்களை கைதுசெய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பை நாடவுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு தடைகளை உடைத்துக்கொண்டு அந்த பகுதிக்குள் நுழைந்த 300 பேர் குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33