ரஞ்சனுக்கு வெகுவிரைவில் விடுதலை கிடைக்கும் என நம்புகின்றேன் - சஜித் பிரேமதாச

By T. Saranya

30 Jul, 2022 | 03:24 PM
image

(எம்.மனோசித்ரா)

மனிதாபிமானம் மிக்க அரசியல்வாதியான ரஞ்சன் ராமநாயக்க வெகுவிரைவில் முழுமையான விடுதலை பெறுவார் என்று தான் நம்புவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நேற்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மேலும் குறிப்பிடுகையில்,

வெகுவிரைவில் தனக்கு முழுமையான விடுதலை கிடைக்கும் என்ற சாதகமான எதிர்பார்ப்புடன் ரஞ்சன் ராமநாயக்க காத்திருக்கின்றார். அவருக்கு முழுமையான விடுதலை கிடைக்க வேண்டும் என்பதே, என்னுடையதும் முழு இலங்கை மக்களதும் எதிர்பார்ப்பாகும். இதற்காக நாம் பிரார்த்திற்கின்றோம். எமது பிரார்த்தைக்கு ஏற்ப நீண்ட நாட்கள் அன்றி , மிக விரைவில் அவருக்கு முழுமையான விடுதலை கிடைக்கும் என்றும் நம்புகின்றோம்.

நீண்ட நாட்கள் செல்வதற்கு முன் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க முழுமையான விடுதலை கிடைக்கும் எதிர்பார்பார்ப்பதோடு, அந்நாள் வரும் வரை காத்திருக்கின்றோம். அவர் ஓர் உண்மையான மனிதாபிமானி என்பதோடு ஒரு மக்கள் சார் கலைஞராகவும்  மகத்தான பணிகளை நிறைவேற்றியுள்ளார்.

மனிதாபிமான மிக்க அரசியல்வாதிவாதியும், மக்கள் சார் கலைஞராகவும் தொடர்ந்து மக்கள் செல்வாக்குள்ள பிரபலம் மிக்க ரஞ்சன் ராமநாயக்க, சுதந்திரமான பிரஜையாக சமூகத்திற்குத் திரும்பி, உறுதியுடன் சமூக நீதிக்காக பாடுபடுவதை பார்க்க வேண்டும் என்பதே எமது ஒரேயொரு நோக்கமாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39
news-image

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும்...

2022-11-28 19:54:34