ஆகஸ்ட் விடுமுறை இன்றி பாடசாலை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் ; கல்வி அமைச்சு

By Digital Desk 5

30 Jul, 2022 | 03:29 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் ஆகஸ்ட் மாதம் விடுமுறையின்றி பாடசாலை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். மேலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தர பரீட்சைகள் நவம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிக்கையில் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

தரம் 5 புலமைப் பரீட்சையில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை கருத்தில்கொண்டு தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் நாளை முதல் தொடர்ச்சியாக கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அதன்படி ஆகஸ்ட் மாதம் விடுமுறையின்றி பாடசாலை செயற்பாடுகள் நவம்பர் மாதம் இறுதி வரை தொடர்ச்சியாக நடைபெறும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு பரீட்சைகள் பிற்போடப்பட்டு இருந்தது. அதிகளவிலான பரீட்சைகள் நிலுவையில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நடத்துவதற்கு கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது. மேலும் க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடத்தப்பட உள்ளது.

மேலும் தரம் 1 மற்றும் 2 வகுப்புகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாது 3 தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான  தேவைகளை கண்டறிவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்து கல்வி அமைச்சினால் ஆராயப்படுகிறது.

இந்நிலையில், அதிபர் தரம் மூன்றிற்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை அதிபர் சேவையின் மட்டுப்படுப்படுத்தப்பட்ட போட்டி பரீட்சையின் அடிப்படை சம புள்ளிகளைப் பெற்ற 155 அதிகாரிகளுக்கு இலங்கை அதிபர் சேவையின் தரம் 111 தொடர்பான புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், க. பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு பிரதான பாடங்கள் 24 உள்ளடக்கிய வகையில் பல்கலைக்கழகங்கள் மூலம் பயிற்சி பாடநெறிகள் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு நிலையினால் மட்டுப்படுத்தப்பட்ட பொது போக்குவரத்து காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் தனியார் பொது போக்குவரத்து  பஸ்கள் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் முதல் பாடசாலை பொது போக்குவரத்து பஸ்கள் சேவையில் ஈடுபடும் என்றும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து...

2023-02-01 17:33:03
news-image

இலங்கை ஜனநாயகம் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான தருணம்...

2023-02-01 17:03:46
news-image

ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் இறுதி அஞ்சலியுடன்...

2023-02-01 18:38:05
news-image

சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்...

2023-02-01 16:44:53
news-image

எல்பிட்டிய பிரதேச வீடு ஒன்றிலிருந்து இரு...

2023-02-01 16:39:04
news-image

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் மனைவியை பார்க்க  தாயுடன்...

2023-02-01 16:14:37
news-image

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பேராயர் உட்பட...

2023-02-01 16:26:18
news-image

நிலாவரையில் தவிசாளருக்கு எதிரான தொல்லியல் திணைக்கள...

2023-02-01 15:44:52
news-image

13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும்...

2023-02-01 15:19:01
news-image

இன்ஸ்டாகிராமில் அதிகம் பகிரப்பட்ட நாடுகளின் பட்டியலில்...

2023-02-01 15:18:18
news-image

சிலாபம் பிரதேச சபையின் செயலாளர் ஸ்ரீயானியின்...

2023-02-01 15:07:23
news-image

சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுக்களின் போது அமெரிக்கா...

2023-02-01 15:06:02