விவாகரத்து கோரிய மனைவியை கடத்திச் சென்ற கணவன் ; மூவருக்கு விளக்கமறியல் - மட்டக்களப்பில் சம்பவம்

Published By: Digital Desk 3

30 Jul, 2022 | 02:33 PM
image

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரசேத்தில்  விவாகரத்துகோரிய மனைவியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கணவர், பெற்றோர் உட்பட கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார். 

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரசேத்தில் வசித்த  பெண் அதே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரை கடந்த 6 மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கணவனைவிட்டு பிரிந்து சென்று தனது பெற்றோருடன் வாழ்ந்துவருகின்ற நிலையில்  கணவனிடம் விவாகரத்து கோரி நீதிமன்றில் வழக்குதாக்குதல் செய்துள்ளார்.

சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை (29) காலையில் குறித்த பெண்ணின் வீட்டை  கணவர், அவரது பெற்றோர் உட்பட 3 பேர் முச்சக்கரவண்டியில் சென்று முற்றுகையிட்டுள்ளனர்.

இந்நிலையில், அங்கிருந்த மனைவியின் தாயார் மற்றும் அவரது இரு சகோதரிகளை தாக்கிவிட்டு மனைவியை கடத்தி சென்று கணவன் தனது வீட்டின் அறையில் பூட்டிவைத்துள்ளார்.

இந்த தாக்குதலில் பெண்ணின் தாயார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, 119 பொலிஸ் அவசரசேவைக்கு தனது சகோதரியை கடத்தி சென்றுள்ளதாக முறைப்பாட்டையடுத்து, மட்டு தலைமையக பொலிஸார் கடத்திச் சென்ற  பெண்ணை மீட்டதுடன் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணின் கணவர் அவரது பெற்றோர் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நேற்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் திங்கட்கிழமை வரைவிளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53