பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடல் வெளியிட்ட திகதி அறிவிப்பு

By Digital Desk 5

30 Jul, 2022 | 02:12 PM
image

மணிரத்னம் - ஏ. ஆர். ரகுமான்  இணைந்து பணியாற்றி வரும் படைப்பாகவும், பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமாகவும் உள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் வெளியான ஒப்பற்ற சரித்திர நாவல் அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்'. பல தடைகளுக்குப் பிறகு இந்த நாவல் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு பிரம்மாண்ட பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இரண்டு பாகங்களாக 'பொன்னியின் செல்வன்' எனும் பெயரில் திரைப்படமாக தயாரித்திருக்கிறார்கள். 

இதன் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. 

தற்போது படத்தில் இடம்பெற்ற சிங்கிள் ட்ராக் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஜூலை 31 ஆம் திகதி மாலை 6:00 மணியளவில் இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஓஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் தயாராகியிருக்கும் இந்த பாடல் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

சோழர் காலகட்டத்திய இசையை, இசைப்புயல் ஏ ஆ ஆர் வழியாக ரசிக்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதனிடையே இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் சிங்கிள் ட்ராக் தயாராகி வரும் பாணியைக் குறித்து பிரத்யேக காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார் என்பதும், இதன் காரணமாக அந்த பாடலுக்கான  எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right