கார்த்தி நடிக்கும் 'விருமன்' வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 5

30 Jul, 2022 | 02:11 PM
image

கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'விருமன்' திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மண் சார்ந்தும்,  உறவுகளின் மேன்மையை மையமாகக் கொண்டும் படங்களை இயக்கி வரும் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'விருமன்'. இதில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். 

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய 'விருமன்' திரைப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்தின் சார்பில் நடிகர் சூர்யா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் சிங்கிள் ட்ராக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஓகஸ்ட் 12ஆம் திகதி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்திய தேவனாக நடித்திருக்கும் கார்த்தியை சிறப்பான நடிப்பைக் காண ஆவலுடன் காத்திருக்கும் தருணத்தில், அவர் மண்ணின் மனம் மாறாமல் கிராமத்து விருமாண்டியாக நடித்திருக்கும் 'விருமன்' படத்தையும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என திரை உலக வணிகர்கள் உறுதியாக தெரிவிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ்...

2025-02-13 17:37:33
news-image

மக்கள் செல்வன் ' விஜய் சேதுபதி...

2025-02-13 17:36:57
news-image

மீண்டும் நடிக்கும் 'காதல் ஓவியம்' புகழ்...

2025-02-13 15:52:49
news-image

கவனம் ஈர்க்கும் ராம் கோபால் வர்மாவின்...

2025-02-13 15:42:51
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ' கிங்டம்...

2025-02-13 15:37:05
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்'...

2025-02-13 15:33:45
news-image

மகளின் ஆசையை நிறைவேற்றும் இளையராஜா

2025-02-13 13:45:38
news-image

நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகும்...

2025-02-12 17:05:51
news-image

நடிகர் தேவ் நடிக்கும் 'யோலோ' படத்தின்...

2025-02-12 17:06:14
news-image

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட்ஹார்ட்'...

2025-02-12 17:05:29
news-image

எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் 'கூரன்' திரைப்படத்தின் வெளியீட்டுத்...

2025-02-12 16:50:42
news-image

தமிழ்நாட்டு விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு...

2025-02-12 16:51:14