கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் 23வது நினைவுதினம் அனுஷ்டிப்பு

By Digital Desk 5

30 Jul, 2022 | 02:33 PM
image

படுகொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் 23வது நினைவுதினம் இன்று (30) அனுஷ்டிக்கப்பட்டது.

அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இன்று மாலை 6மணியளவில் மூளாயில் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது நீலன் திருச்செல்வத்தின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது.

நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன், அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1999ம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் நீலன் திருச்செல்வம் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right