பாலியல் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் அதிகம் பார்த்து அதன் பாதிப்பால் 12 வயது சிறுவன் ஒருவன் 9 வயது நிரம்பிய தன் சொந்த சகோதரியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியா நாட்டில் 12 வயது சிறுவன் தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளான். அதிக நேரம் கணனியில் இணையத்தை பார்ப்பதிலேயே அவன் செலவிட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவன் என்ற எண்ணத்தில் பெற்றோரும் அவன் எதாவது இணையத்தில் விளையாடுவான் எனஅதை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர்.

ஆனால் இணையத்தில் அவன் பாலியல் சம்மந்தமான வீடியோக்களை  தொடர்ந்து  பார்த்து வந்ததால் அவன் அதற்கு அடிமையாகியுள்ளான்.

இந்நிலையில் தனது 9 வயதேயான இளைய சகோதரியை அவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டி பலமுறை இப்படி செய்துள்ளார்.

பின்னர் இச் சம்பவம் தொடர்பில்  பொலிஸாருக்கு தெரியவர குறித்த சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இது சம்பந்தமாக நீதிபதி கூறுகையில், குறித்த சிறுவனுக்கு 12 வயது என்பதால் அவனை சிறையில் அடைக்க முடியாது. அதனால் பாலியல் மற்றும் மனது சம்மந்தமான சிகிச்சை மையத்தில் அவன் தனது 16 வயது  பூர்த்தியாகும் வரை அங்கு தங்கி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

சிகிச்சை முடிந்து வெளியில் வந்தாலும் அவன் பொலிஸாரால் தொடர்ந்து கண்காணிக்க படுவான் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.