இலங்கையில் காணப்படும் முன்னணி சீன உணவு வகைகளுக்கான உணவகமாக திகழும் சைனீஸ் ட்ராகன் கஃபே பிரைவட் லிமிட்டெட் தனது ஏழாவது கிளையை இல. 186, நாவல வீதி, நாவல எனும் முகவரியில் திறந்து வைத்துள்ளது.
அதிகளவு இடவசதிகளைக் கொண்ட இந்த புதிய கிளை வாடிக்கையாளர்களுக்கு இனிய அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளதுடன் புதிய சீன உணவு வகைகளுடன் வாடிக்கையாளர்களின் சுவையரம்புகளுக்கு சிறந்த சுவையை வழங்கி மறக்க முடியாத அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
தாம் இயங்கும் பகுதிகளில் அதிகளவானோர் விரும்பி விஜயம் செய்யும் உணவகமாக திகழ்வது என்பது சைனீஸ் ட்ராகன் கஃபேயின் நோக்கமாகும். பம்பலபிட்டியில் ஆரம்பிக்கப்பட்டது முதல் 2007ம் ஆண்டு தனது இரண்டாவது கிளையை கல்கிசை பகுதியில் திறந்திருந்தது. மூன்றாவது கிளை 2010ம் ஆண்டு ராஜகிரியவிலும் நான்காவது கிளையை கொழும்பின் வியாபார மையப்பகுதியான உலக வர்த்தக மையத்துக்கு அருகில் நிறுவியிருந்தது.
இதனைத்தொடர்ந்து தனது தலைமைக்காரியாலயத்தை ஹெந்தலை பகுதியிலும் திறந்திருந்தது. ஐந்தாவது கிளை நீர்கொழும்பு வீதி வத்தளையிலும் ஆறாவது கிளை பெலவத்தையிலும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருந்தன. dine in, take away அல்லது delivery போன்ற சகல பிரிவுகளிலும் உயர் தரமான சேவையை பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
தற்போது சைனீஸ் ட்ராகன் கஃபே தனது வலையமைப்பில் 7 கிளைகளை கொண்டுள்ளதுடன் இதில் புதிய உள்ளடக்கமாக நாவல கிளை அமைந்துள்ளது.
சைனீஸ் ட்ராகன் கஃபே உணவகத்தினால் வழங்கப்படும் சேவைகளில் வாடிக்கையாளர்களுக்கு உணவகத்திலிருந்து உணவு உட்கொள்ளல் (Dine-in) உணவை வீட்டுக்கு எடுத்துச் செல்லல் வசதி (Take Away food), வீட்டுக்கு மற்றும் அலுவலகத்துக்கு உணவு விநியோகம் (Home and Office Delivery), அலுவலக ஊழியர்களுக்கான உணவு விநியோகம் (Meals for office staff) போன்றன அடங்கியுள்ளதுடன் www.chinesedragoncafe.com எனும் இணையத்தளத்தினூடாகவும் Facebook பக்கத்தினூடாகவும் உணவுகளை ஓடர் செய்து கொள்ளக்கூடிய வசதியும் வழங்கப்படுகிறது.
Facebook பக்கத்தில் 150,000 க்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளதுடன்ரூபவ் அவர்களுடன் தொடர்பாடல்களை பேணுவதற்காக இந்த பக்கத்தை பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் சேவைத்தரங்கள் என்பது எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்திருப்பதை உறுதி செய்கிறது. google street view என்பதை பயன்படுத்தி தமது சகல கிளைகளுக்கும் virtual tours ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவருந்த வருகை தரும் முன்னர் காணப்படும் வசதிகளை பார்வையிட முடியும்ரூபவ் அதன் மூலம் “நினைவிருக்கும் உணவு” யையும் அவர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
சைனீஸ் ட்ராகன் கஃபே பிரைவட் லிமிட்டெட் பணிப்பாளர் சௌரப் உதேஷி கருத்துத் தெரிவிக்கையில்>
“இந்த ஆண்டின் முற்பகுதியில் நாம் பெலவத்தை கிளையை வெற்றிகரமாக நிறுவியிருந்ததைத்தொடர்ந்து நாவல பகுதியை நாம் தெரிவு செய்திருந்தோம். ராஜகிரிய மற்றும் பெலவத்தை கிளைகள் வார இறுதி நாட்களில் அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது இது குறித்து எமது வாடிக்கையாளர்கள் சமூக ஊடக வலைத்தளங்களினூடாக தமது அதிருப்திகளை வெளியிட்டிருந்தனர்.
நாவல வீதியில் அமைந்துள்ள பாரிய அலுவலகங்களுக்கு சேவைகளை வழங்கும் வகையில் நாவல கிளை அமைந்திருக்கும் குறிப்பாக இந்த பிரதேசத்தில் காணப்படும் மாணவர்கள் நுகேகொட, கிருலப்பனை, நாராஹேன்பிட மற்றும் கொஸ்வத்த பிரதேசங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.” என்றார்.
சைனீஸ் ட்ராகன் கஃபேயின் மற்றுமொரு இலக்கு என்பதுரூபவ் சீன உணவு வகைகளை சகாயமான விலையில் “நினைவிருக்கும் உணவு வேளை” யாக வழங்குவது அமைந்துள்ளது. தெரிவு செய்து கொள்ளக்கூடிய ட்ராகன் பக்கட் மற்றும் ட்ராகன் சிற்றுண்டிகள் ஆகியவற்றை ரூபா. 50 இலிருந்து வழங்கி வருகிறது. சைனீஸ் ட்ராகன் கஃபே என்பதுரூபவ் சைவ உணவுத்தெரிவுகள் பலதையும் வழங்கி வருவதுடன், பழ ரசங்களையும் சீனி இன்றி வழங்குகிறது.
மேலும், மில்க் ஷேக் வகைகள் மற்றும் ஐஸ் தேநீர் போன்ற பான வகைகளையும் தமது உணவு வேளைகளில் இந்த ஆண்டின் முற்பகுதியில் அறிமுகம் செய்துள்ளது. ஒரு மணி நேரத்தினுள் உணவுத் தெரிவுகளை விநியோகிக்கும் உறுதிமொழியை சைனீஸ் ட்ராகன் கஃபே வழங்குகிறது. தரம், அளவு மற்றும் வாடிக்கையாளர் தன்னிறைவை மேம்படுத்துவதற்கான பல்வேறு பயிற்சி மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளை சைனீஸ் ட்ராகன் கஃபே மேற்கொண்டு வருகிறது.
சிலி பேஸ்ட் தற்போது விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கண்ணாடி போத்தல்களில் சுகாதார முறையில் அடைக்கப்பட்டு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் காரமான சுவையை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சைவ சிலி பேஸ்ட் தெரிவையும் சைனீஸ் ட்ராகன் கஃபே கொண்டுள்ளது. சைனீஸ் ட்ராகன் கஃபே கிளைகள், கீல்ஸ் மற்றும் ஆர்பிகோ சுப்பர் மார்க்கெட்களிலிருந்து இந்த சிலி பேஸ்ட் போத்தல்களை கொள்வனவு செய்ய முடியும்.
சைனீஸ் ட்ராகன் கஃபே பணிப்பாளர் சௌரப் உதேஷி தொடர்ந்து தெரிவிக்கையில்,
“உயர் தரம் வாய்ந்த உணவு மற்றும் சேவைகளை எமது ஊழியர்கள் பெற்றுக்கொடுக்கின்றமையையிட்டு நாம் பெருமை கொள்கிறோம். இவர்களின் அர்ப்பணிப்பான சேவை காரணமாக, எம்மால் இன்றை நிலைக்கு உயர முடிந்துள்ளது.” என்றார். சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் போட்டியை எதிர்கொண்ட வண்ணம்ரூபவ் தனது சேவை மட்டங்கள் மற்றும் உணவின் தரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக தேவையான பயிற்சிகள் மற்றும் அபிவிருத்திகள் ஆகியவற்றை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
சூழலுக்கு நட்புறவான சேவைகளை வழங்கும் வகையில் மீள்சுழற்சிக்குட்படுத்தக்கூடிய உணவு பொதி செய்யும் பொலிதீன்கள் மற்றும் பைகளை அறிமுகம் செய்துள்ளதுடன் கழிகானியல் வசதிகள் இல்லாத கிளைகளில் கழிவு நீரை சுத்திகரிக்கும் வசதிகளையும் அறிமுகம் செய்துள்ளது. தமது ஊழியர்களுக்குரூபவ் பயிற்சிகள், தங்குமிட வசதி, தொழில்நிலை விருத்தி, இலவச உணவு வேளைகள், கொடுப்பனவுகள் மற்றும் பல வசதிகளை தமது ஊழியர்களுக்கு சைனீஸ் ட்ராகன் கஃபே வழங்கி வருகிறது. இதனூடாக துறையில் காணப்படும் சிறந்த தொழில் வழங்குநராக திகழ்வது என்பது நிறுவனத்தின் நோக்காகும். சைனீஸ் ட்ராகன் கஃபேயில் தற்போது 300க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஒவ்வொரு புதிய கிளையிலும் 30 புதிய ஊழியர்கள் உள்வாங்கப்படுகின்றனர். “நாம் எப்போதும் பிரகாசமான, தொழில்முயற்சியாண்மையுடன் கூடிய தொழில்நுட்ப அறிவு படைத்தரூபவ் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுவதை அடிப்படையாகக் கொண்ட நபர்களை இணைத்துக்கொண்டு எமது வியாபாரத்தை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தி வருகிறோம்” என உதேஷி மேலும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு சட்ட விதிமுறைகளை முறையாக சைனீஸ் ட்ராகன் கஃபே பின்பற்றி வருவதுடன் விலைகளும் போட்டிகரத்தன்மை வாய்ந்ததாக அமைந்துள்ளன. அரசாங்கத்துக்கு செலுத்தப்பட வேண்டிய சகல வரிகளையும் முறையாக செலுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. உள்நாட்டு நிறுவனமாக சைனீஸ் ட்ராகன் கஃபே நாமத்தை கட்டியெழுப்பும் வகையில் தனது கிளை வலையமைப்பை மேலும் விஸ்தரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது.
இறுதியாக, “சைனீஸ் ட்ராகன் கஃபே என்பது…. நினைவிருக்கும் உணவு என்பதை வழங்குகிறது என்பதை கவனத்தில் வைத்திருங்கள்” என உதேஷி மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM