யாழில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் விடப்படும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து அதன் உதிரி பாகங்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருள் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வரிசையில் விடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றின் முன் பகுதியின் பாகம் களவாடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் விடப்பட்ட "ஜப்பான் 200" ரக மோட்டார் சைக்கிளின் ஒரு பக்கம் பாகம் களவாடப்பட்டு இருந்தது. அதன் பெறுமதி 12 ஆயிரத்திற்கும் அதிகம் என உரிமையாளர் தெரிவித்து இருந்தார்.
இவ்வாறாக வரிசைகளில் இரவு வேளைகளில் விடப்படும் மோட்டார் சைக்கிள்களின் , பக்க கண்ணாடிகள் , சிக்கனல்கள் , கோர்ன் உள்ளிட்ட உதிரிபாகங்கள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM