சூரியவெவ பிதேசத்தில் தந்தை ஒருவர் தனது மகளை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். 

குறித்த சம்பவம் பொலிஸாருக்கு தெரியவந்ததை அடுத்து, அவரது வீட்டின் முற்றத்திலுள்ள மாமரத்தில் தூக்கியிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தனது 15 வயது மகளை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

குறித்த சிறுமியின் தாய் வறுமையின் நிமித்தமாக மத்தியகிழக்கு நாட்டில் பணிபுரிந்து வருகின்ற நிலையில், கடந்த பல மாதங்களாக இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுவருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.