ஆஸி மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 177 ஓட்டங்களால் அபார வெற்றிப்பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 242 ஓட்டங்களை பெற்றதுடன், ஆஸி அணி 244 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் இரண்டு ஓட்டங்கள் பின்னடைவில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி டுமினி மற்றும் எல்கர் ஆகியோரின் சதத்தின் உதவியுடன் 540 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் டுமினி 141 ஒட்டங்களையும் எல்கர் 127 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை 539 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி  361 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

ஆஸி அணி சார்பில் கவாஜா 97 ஒட்டங்களையும், பீட்டர் நெவில் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 7 விக்கட்டுகளை கைப்பற்றிய தென்னாபிரிக்க அணியின் ரொபாடா தெரிவுசெய்யப்பட்டார்.