மக்களின் குரலுக்கு செவிசாய்க்கவேண்டுமே தவிர, அடக்குமுறை கூடாது

04 Aug, 2022 | 09:31 AM
image

போராட்டக்காரர்களை தனிமைப்படுத்துவதை விடுத்து அவர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை மதித்து அரசாங்கம் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டும்.மக்களின் குரலுக்கு செவிமடுக்கவேண்டுமே தவிர, போராட்ட இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களை இலக்குவைத்து அடக்குமுறையை செய்யக்கூடாது என்று இலங்கை தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்திக் கேட்டிருக்கிறது.

வெள்ளியன்று சமாதானப் பேரவை இது தொடர்பில் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது ; 

 உலகில் அரிதாக காணப்படக்கூடிய ஒரு வகையான அரசியல் கொந்தளிப்பை இலங்கை கண்டிருக்கிறது.மக்களுக்காக,மக்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதமேந்தாத  ஒரு மக்கள் இயக்கம் ஒரு ஜனாதிபதியை, ஒரு பிரதமரை, ஒரு அமைச்சரவையை பதவிவிலக நிர்ப்பந்தித்தது.

இந்த போராட்ட இயக்கம் அதன் பருமன், பயனுறுதி மற்றும் அமைதிவழி ஆகியவை காரணமாக சர்வதேச சமூகத்தின் கவனத்தை பெரிதும் ஈர்த்ததை காணக்கூடியதாக இருந்தது.போராட்ட இயக்கத்தின் வெற்றிக்கு  காரணம் அதன் தன்னெழுச்சியும் அமைதியும் கொண்ட தன்மையேயாகும்.

மக்களின் மெய்யான மனக்குறைகள் மற்றும் பிரச்சினைகளில் இருந்த வெளிக்கிளம்பிய போராட்ட இயக்கம் மாபெரும் வெகுஜன இயக்கமாக மாறியது.இடர்மிகு நிலைவரத்துக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்த முன்னைய அரசாங்கம் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தவறியது.இடம்பெற்றிருக்கக்கூடிய வன்முறைகள் அரசாங்கத்தினாலேயே முதலில் தொடக்கிவிடப்பட்டவையாகும்.

புதிய ஜனாதிபதி தலைமையில் இப்போது பதவிக்கு வந்திருக்கும் புதிய அரசாங்கம் 2022 மே மாதம் பதவி விலகிய அமைச்சரவையின் உறுப்பினர்களையே பெரும்பாலும் கொண்டிருக்கிறது.இது போராட்டக்காரர்களின் அதிருப்திக்கும் வெறுப்புக்கும் மேலும் வலுச்சேர்த்திருக்கிறது.

பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களை விரிவாக விசாரித்து அதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.தவறான ஆட்சிமுறை மற்றும் ஊழல் காரணமாக நாடு சந்திக்கவேண்டியிருந்த பல தோல்விகள் தற்போதைய பாராளுமன்றத்தின் மீது மக்களை நம்பிக்கை இழக்கச்செய்துவிட்டன.அதனால் புதிய மக்கள் ஆணையுடன் பாராளுமன்றம் தெரிவுசெய்யப்படுவதற்காக விரைவில் தேர்தல் ஒன்றை அறிவிக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோருகிறோம்.

போராட்டங்களை மூளவைத்த காரணிகளை கையாளுவதற்கு பதிலாக அரசாங்கம் போராட்ட இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களை வலுவில்லாத குற்றச்சாட்டுக்களின் பேரில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் இலக்குவைப்பது எமக்கு பெருங்கவலையை தருகிறது.இந்த அவசரகாலச் சட்டத்தின் கீழ் கிரமமான சட்டங்களும் அவற்றினால் கிடைக்கின்ற பாதுகாப்புகளும் இடைநிறுத்தப்படுகின்றன.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் நிலை பலமானதாக தோன்றுகிறது,ஆனால் அதன் மக்கள் ஆதரவு மிகவும் பலவீனமானதாக இருக்கிறது என்று உலக நாடுகளின் பொருளாதார நிலைவரம் குறித்து மதிப்பீடு செய்கின்ற 'ஃபிற்ச் றேட்டிங் 2022 ஜூலை 28 கூறியிருக்கிறது.

அதனால் அரசாங்கம்  போராட்டக்காரர்களை தனிமைப்படுத்துவதை விடுத்து அவர்களின்  நியாயபூர்வமான கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அவர்களுடன் அர்த்தபுஷ்டியான முறையில் ஊடாட்டங்களை செய்வதற்கு வழிவகைகளைக் கண்டறியவேண்டியது முக்கியமானதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகிந்தவும் சர்வதேச சதியும்

2022-11-28 08:17:47
news-image

மோடி - ரணில் சந்திப்புக்கு நாள்...

2022-11-26 16:25:50
news-image

சீனா தயக்கம் : இதுதான் காரணம்

2022-11-24 10:16:35
news-image

மஹாதிரின் படுதோல்வி தரும் பாடம்

2022-11-28 08:52:40
news-image

வெற்றிகரமான நல்லிணக்கத்துக்கு மக்களின் நல்லெண்ணமும் நம்பிக்கையும்...

2022-11-21 21:47:01
news-image

அரசின் வரவும் - செலவும் மக்களின்...

2022-11-21 13:15:25
news-image

நல்லிணக்கம், பாதுகாப்பு, இராஜதந்திரம் குறித்து அரசின்...

2022-11-22 09:04:27
news-image

ரணிலின் நேசக்கரம் குறித்து சந்தேகிக்கும் தமிழ்...

2022-11-18 16:33:06
news-image

தமிழ்ப்படகு மக்கள் 

2022-11-15 13:31:24
news-image

பாதுகாப்பை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் அணுகுமுறை...

2022-11-22 09:41:24
news-image

பெருந்தோட்டப்பகுதிகளில் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு காரணங்கள் என்ன...

2022-11-13 12:01:47
news-image

தேசிய நிதி கட்டமைப்பின் 13 விடயங்களை ...

2022-11-12 12:25:24