(நா.தனுஜா)
போராட்டக்காரர்களால் கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராகப் பதவிவகித்தார்.
தற்போது பாராளுமன்றமும் அரசாங்கமும் ராஜபக்ஷ குடும்பத்துடன் மிகநெருங்கிய தொடர்பைக்கொண்ட ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திரக்கூட்டணி அரசியல்வாதிகளின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றது.
இது தற்போதைய பொருளாதார நிலைவரத்தில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலோ அல்லது மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புக்கள் மக்களின் எதிர்ப்பிற்குரியவையாக இருந்தாலோ மீண்டும் ஆர்ப்பாட்டாங்கள் தீவிரமடையக்கூடிய அச்சுறுத்தலைக்கொண்டிருக்கின்றது என்று சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் எச்சரித்திருக்கின்றது.
பெரும்பான்மை ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டாலும் கூட, இலங்கையானது ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலை ஆகிய நெருக்கடிகளிலிருந்து மீள்வதில் இன்னுமும் அரசியல் ரீதியான அபாயத்திற்கு முகங்கொடுத்திருப்பதாக ஃபிட்ச் ரேட்டிங் தரப்படுத்தல் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
'புதிய ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு காணப்படுவதுடன் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் சிலரும் அவரது அரசாங்கத்தில் இணைந்துகொண்டிருக்கின்றனர்.
இது நுண்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடனுறுதிப்பாடு ஆகியவற்றை மீண்டும் நிலைநாட்டுவதற்கு அவசியமான கடினமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும், பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும் போதுமான ஆதரவு இருக்கின்றது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வாறான மறுசீரமைப்புக்கள் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதில் காணப்படக்கூடிய தடைகளை நீக்குவதற்கு உதவும் என்பதுடன், தற்போதைய சூழ்நிலையில் கடன்களை மீளச்செலுத்தமுடியாதவாறு இலங்கை முறிவடைவதைத் தடுப்பதற்கும் இன்றியமையாததாகும்' என்று இலங்கை தொடர்பில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் வலுவான ஆதரவு காணப்படினும், அதற்கான பொதுமக்களின் ஆதரவென்பது மிகக்குறைவானதாகவே காணப்படுவதாக ஃபிட்ச் ரேட்டிங் தரப்படுத்தல் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
'போராட்டக்காரர்களால் கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராகப் பதவிவகித்தார். தற்போது பாராளுமன்றமும் அரசாங்கமும் ராஜபக்ஷ குடும்பத்துடன் மிகநெருங்கிய தொடர்பைக்கொண்ட ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திரக்கூட்டணி அரசியல்வாதிகளின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றது.
இது தற்போதைய பொருளாதார நிலைவரத்தில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலோ அல்லது மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புக்கள் மக்களின் எதிர்ப்பிற்குரியவையாக இருந்தாலோ மீண்டும் ஆர்ப்பாட்டாங்கள் தீவிரமடையக்கூடிய அச்சுறுத்தலைக்கொண்டிருக்கின்றது' என்றும் ஃபிட்ச் ரேட்டிங் தரப்படுத்தல் நிறுவனம் கரிசனை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM