முன்னிலை சோசலிசக் கட்சியை தடை செய்வது தொடர்பில் பேச்சு

Published By: T Yuwaraj

29 Jul, 2022 | 06:03 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

மக்கள் போராட்டத்தை  கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு அடக்குமுறை உக்திகளை  பயன்படுத்தி வரும் நிலையில்,  முன்னிலை சோசலிச கட்சியை தடைச் செய்வது தொடர்பில்  உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டுள்ளன.

எனினும் குறித்த கட்சியை தடை செய்வது தொடர்பில் இறுதி முடிவுகள் எதுவும் இதுவரை எட்டப்படாத நிலையில், அது குறித்து அவதானம் செலுத்தி பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Articles Tagged Under: முன்னிலை சோசலிசக் கட்சி | Virakesari.lk

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான தற்போதைய போராட்டத்தின் பின்னணியில் முன்னிலை சோசலிச கட்சியின் பங்களிப்பு மிகப் பெருமளவில் இருப்பதாக நம்பப்படும் பின்னணியில், அக்கட்சியை தடை செய்வது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக அரிய முடிகிறது.

இவ்வாறான பின்னணியிலேயே முன்னிலை சோசலிசக் கட்சியின்  நுகேகொடையில் உள்ள தலைமை அலுவலகம்  இன்று காலை  இரு வேறு குழுவினரால் சோதனையிடப்பட்டுள்ளது.

இரண்டு குழுக்கள் வருகை தந்து அலுவகத்தை சோதனையிட்டதாக முன்னிலை சோசலிசக் கட்சியின்   கல்வி செயலாளர் புபுது ஜாயகொட தெரிவித்தார்.

ஒரு குழு சிவில் உடையில் இருந்ததாகவும் அவர்களிடம் எந்த  சோதனை உத்தரவுகளும் இருக்கவில்லை எனவும் தெரிவித்த கட்சியின் உயர் மட்ட உறுப்பினர் ஒருவர், 2 ஆவதாக வந்த குழு மிரிஹானை விஷேட  விசாரணைப் பிரிவினர் என அடையாளப்படுத்தியதாக குறிப்பிட்டார்.

முதலில் வந்த குழுவினர் வௌ்ளை வேனில்  வருகை தந்து சோதனையிட்டதாக முன்னிலை சோசலிசக் கட்சி  கல்வி செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

முதலில்  காலை 7.30 மணிக்கு வந்த குழுவில்  பொலிஸ்  சீருடையுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் இருந்ததுடன் ஏனைய 10 இற்கும் மேற்பட்டோர் சிவில் உடையில் இருந்ததாக  அவர் கூறினார்.

சோதனை நடவடிக்கை குறித்து முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ கருத்து வௌியிடுகையில்,

'முதலில் சோதனைக்காக வந்தவர்கள்  எந்த பொலிஸ் நிலையத்தை சேர்ந்தவர்கள் என வினவிய போதும், பதிலளிக்க மறுத்துவிட்டனர். அவர்களிடம் எந்த சோதனை அனுமதி உத்தரவும் இருக்கவில்லை.

 அவர்கள் சென்றதும் பொலிஸ் சீருடையில் சிலர் வந்தனர். அவர்கள் தங்களை  மிரிஹானை பொலிஸ் நிலைய அதிகாரிகள் என  அடையாளபப்டுத்தினர். அவர்களுக்கு முன்னர் வந்த குழுவினர் தொடர்பில் எதுவும் தெரிந்திருக்கவில்லை.

சோதனைக்கான  நீதிமன்ற உத்தரவில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவின் பிடியாணைக்கான பெயர் இருந்ததது.

வசந்த முதலிகேவின் பிடியாணையை வைத்துக்கொண்டு முன்னிலை சோசலிசக் கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தரவேண்டிய அவசியம் இல்லை ' என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்சங்க பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சி...

2023-04-01 15:54:12
news-image

தேர்தலை நடத்த டிசம்பர் வரை காத்திருக்க...

2023-04-01 15:50:02
news-image

ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க இடமளிக்க...

2023-04-01 15:48:08
news-image

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்...

2023-04-01 19:52:53
news-image

சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர்...

2023-04-01 15:51:25
news-image

மீண்டும் பழைய யுகத்திற்கே மக்கள் செல்ல...

2023-04-01 17:28:39
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்ட சட்டமூலம்...

2023-04-01 15:46:16
news-image

பெளத்த பிக்கு உட்பட நான்கு பேர்...

2023-04-01 15:44:06
news-image

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்...

2023-04-01 11:50:11
news-image

கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோர் தொடர்பில்...

2023-04-01 12:35:28
news-image

இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு...

2023-04-01 17:27:42
news-image

இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை...

2023-04-01 17:29:56