(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, பாராளுமன்றத்திற்குள் மிளகாய் தூள் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தண்டிக்கப்படாத நிலையில், ஜனநாயக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பொதுச்சொத்து துஸ்பிரயோகத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது.ஜனநாயக போராட்டத்தை சர்வாதிகாரமான முடக்கினால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி ரணில் ராஜபக்ஷ மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து மக்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக அடக்கு முறையை கட்டவிழ்த்து விடுகிறார்.அடக்கு முறையினை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசமுறை கடன் 52 பில்லியனாக உயர்வடைந்துள்ளது. நாட்டில் பணவீக்கம் 60 சதவீதமாக காணப்படுகிறது.எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கிறது.
பல்வேறு நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள மக்கள் போராட்டத்;தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.கடந்த மே மாதம் 09ஆம் திகதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாரவாளர்கள் காலி முகத்திடல் போராட்டகளத்தில் மீது வன்முறையான தாக்குதலை மேற்கொண்டதை தொடர்நது நாட்டில் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் தோற்றம் பெற்றன.இதனை தொடர்ந்தே மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது.
மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து ராஜபக்ஷர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாகிய ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷர்களை தொடர்ந்து பாதுகாப்பதற்காக ஜனநாயக ரீதியிலான போராட்டகாரர்கள் மீது மிலேட்சத்தனமான தாக்குதலை முன்னெடுத்துள்ளார்.போராட்டகாரர்களை தீவிரவாதிகள் என சுட்டிக்காட்டுவது முற்றிலும் தவறானது.
போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
52நாள் அரசாங்கத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்களினால் பாராளுமன்றத்தின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன,அதற்கான கானொளிகள் உள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் வெலிகட பொலிஸ் நிலையத்தின் தனிப்பட்ட முறையில் முறைப்பாடு செய்துள்ளேன்.
குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வாக்குமூலமளித்துள்ளேன்.பாராளுமன்ற சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்கள்,மிளகாய் தூள் தாக்குதலை மேற்கொண்டவர்கள் என எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
சட்டம் சகலருக்கும் பொதுவாக செயற்படுத்தப்பட வேண்டும் பாராளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் ஆதாரமில்லாமல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்வதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
மக்களின் ஜனநாயக போராட்டத்தை சர்வாதிகாரமான முறையில் முடக்கினால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM