இலங்கையின் பொறுப்பு கூறல், மனித உரிமைகள் தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் - ஜனாதிபதிக்கிடையில் விசேட கலந்துரையாடல்

Published By: Vishnu

29 Jul, 2022 | 03:51 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறல், மனித உரிமைகளுக்கு இணங்க செயற்படுதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஆகியோருக்கிடையில் 28 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

இதன் போது ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர் ஹல்டன், பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

பொருளாதார மீட்சி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறல், மனித உரிமைகளுக்கு இணங்க செயற்படுதல் உள்ளிட்ட  பல்வேறு விடயங்கள் குறித்தும்  இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதே தமது விருப்பம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , குறிப்பிட்டதுடன் அதற்கு பூரண ஆதரவை வழங்குவதாக உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.

இதே வேளை இந்த சந்திப்பு தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் , 'பிரித்தானியா - இலங்கைக்கு இடையிலான உறவை அமைதியானதும் ஜனநாயகமானதுமான சூழலுக்குள் வலுப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.

ஜனாதிபதியுடனான இந்த விரிவான கலந்துரையாடலானது , ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயன்முறைக்கமைய இலங்கையில் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்தது.' என்று குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08