எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையிலிருந்த மோட்டார் சைக்கிள்களை அடித்து நொருக்கிய காட்டுயானை

Published By: Vishnu

29 Jul, 2022 | 03:13 PM
image

(பெரியபோரதீவு நிருபர்)     

பெற்றோல் நிரப்புவதற்கு வரிசையில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை காட்டுயானையொன்று அடித்து நொருக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

மட்டக்களப்பு, போரதீவுப் பற்று பிரதேசத்திற்குட்பட்ட வெல்லாவெளியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் நிரப்புவதற்காக 28 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை வேளையிலிருந்தே மோட்டார் வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் 29 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு அப்பகுதிக்கு வந்த காட்டு யானை ஒன்று வரிசையில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது தனது பலத்தைக் காண்பித்து துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த காட்டு யானை அப்பகுதியிலுள்ள புன்னக்குளம் கிராமத்தினூடாக கடந்து வெல்லாவெளி எரிபொருள் நிரப்பு நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு வந்துள்ளது.

இந்நிலையில் அங்கு வரிசையில் வைக்கப்பட்டிந்த மோட்டார் சைக்கிள்களை துவம்சம் செய்ததில் 7 மோட்டார் சைக்கிள்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

அதில் 3 மோட்டார் சைக்கிள்கள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், ஏனைய 4 மோட்டார் சைக்கிள்களும், பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி கிராம சேவை உத்தியோகஸ்த்தர் தெரிவிக்கின்றார். இதனால் சுமார் 30 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தாம் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றுவதற்கும், விவசாய நடவடிக்கைகளுக்குமாக பெற்றோல் இன்றி மிகவும் தவித்து வருகின்றோம். இந்நிலையில் பெற்றோல் நிரப்புவதற்காகவே  எமது மோட்டார் சைக்கிள்களை வைத்தோம் எமது மோட்டார் சைக்கிள்களுக்கு தற்போது இந்த நிலமை ஏற்பட்டுள்ளது.

இதனால் எமது பிள்ளைகளின் கல்வியும், வாழ்வாதாரமும் பாதிப்படையும். இது எமக்கு மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்றுதான் உள்ளது. எமக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா அழைத்தால் வொஷிங்டனுக்குச் சென்று எமது...

2025-01-14 14:29:52
news-image

துப்பாக்கி முனையில் யுவதியை கடத்திச் சென்ற...

2025-01-14 14:21:51
news-image

ஏறாவூரில் கிணற்றுக்குள் வீழ்ந்து 2 வயது...

2025-01-14 14:18:39
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று...

2025-01-14 14:17:38
news-image

நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக...

2025-01-14 14:18:27
news-image

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு...

2025-01-14 13:39:17
news-image

நவகமுவ பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2025-01-14 13:15:19
news-image

பமுனுகமவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது...

2025-01-14 13:06:21
news-image

பதுளையில் ரயிலில் மோதி ஒருவர் பலி!

2025-01-14 11:03:45
news-image

நீர்கொழும்பில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-01-14 10:50:53
news-image

அத்துருகிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2025-01-14 10:35:01
news-image

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு!

2025-01-14 10:24:58