தனுஷின் 'வாத்தி' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு

Published By: Digital Desk 5

29 Jul, 2022 | 01:28 PM
image

நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் தயாராகி வரும் 'வாத்தி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

தெலுங்கின் முன்னணி இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வாத்தி'. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியின் ஒரே தருணத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் தனுஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். 

இவர்களுடன் சமுத்திரக்கனி, சாய்குமார், ஷா ரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்டை ராஜேந்திரன், ஹரிஷ் பெராடி, பிரவீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜே. யுவராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு  ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

கல்வி கற்பிக்கும் நிறுவனத்தின் வணிக சூழலுக்கு எதிராக விழிப்புணர்வூட்டும் வகையில் எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் 'வாத்தி' படத்தின் டீசரில் இடம் பெற்றிருக்கும் வசனங்கள் ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றிருக்கிறது. குறிப்பாக ''படிப்பு என்கிறது பிரசாதம் மாதிரி.. குடுங்க. அத பைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மாதிரி விற்காதீங்க..' என்ற வசனங்கள் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதனிடையே தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் தயாராகி வரும் 'திருச்சிற்றம்பலம்', 'கேப்டன் மில்லர்', 'நானே வருவேன்' ஆகிய படங்களிலிருந்தும் பிரத்யேகமாக போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்