டீசலை பெற்று அதிக விலைக்கு விற்கும் தனியார் பஸ்களின் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யவும் - பந்துல

Published By: Vishnu

29 Jul, 2022 | 02:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)

போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிபோக்களில் டீசலை பெற்று போக்குவரத்து சேவையில் ஈடுபடாமல், எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனியார் பேருந்துகளின் அனுமதி பத்திரத்தை உடனடியான இரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

போக்குவரத்து அமைச்சில் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுபோக்குவரத்து சேவையை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக நெருக்கடியான சூழ்நிலையிலும் தனியார் பேரூந்துகளுக்கு போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிபோக்கள் ஊடாக டீசல் விநியோகிக்கப்படுகின்றன.

நாளாந்தம் 5000 அதிகமான பேரூந்துகளுக்கு டிபோக்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்பட்டாலும், அவற்றில் 70 சதவீதமான பேருந்துகள் மாத்திரமே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றன.

பெற்றுக்கொள்ளப்பட்ட எரிபொருளை பேரூந்து உரிமையாளர்கள் அதிக விலைக்கு விற்கும் வியாபாரத்தில் ஈடுப்படுவதை அவதானிக்க முடிகிறது என போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

டிபோக்கள் ஊடாக எரிபொருளை பெற்றுக் கொண்டு பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படாமல்,எரிபொருளை அதிக விலைக்கும் விற்பனை செய்யும் பேரூந்து உரிமையாளர்களின் அனுமதி பத்திரத்தை இரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

பாடசாலை மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு அரச பேருந்து சேவையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மேல்மாகாணத்தில் 40 பேரூந்துகள் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38