பிரிட்டனைச் சேர்ந்த தபால் ஊழியர் ஒருவர், மற்றவர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய 131 தபால்பொதிகளை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
எனினும், மேன்முறையீட்டையடுத்து அந்த ஊழியருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.வலசி ரமோஸ் எனும் இத்தபால் ஊழியர், லண்டன் நகரில் பணியாற்றி வந்தார்.
இவர் தனக்கு சுகவீனமாக உணர்ந்த ஒரு நாளில் தபால் பொதிகளை விநியோகிக்காமல் அவற்றை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டாராம்.
மறுநாள் மேற்படி தபால்களை அவர் தாமதமாக விநியோகிப்பதை வுலசி ரமோசின் சக ஊழியர்கள் சிலர் அவதானித்து, இது குறித்து மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து தபால் பொதிகளை அனுமதியின்றி தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றதுடன், தபால் விநியோகத்தில் தாமதத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் வலசி ரமோஸ் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
எனினும், தன்னை முன்னறியவித்தல் இன்றி பணியிலிருந்து நீக்கியதாக தொழில் பிணக்கு விசாரணை ஆணையகத்திடம் அவர் முறையீடு செய்தார்.
தனக்கு பல்வேறு பிரச்சினைகள் இருந்ததாகவும், மன அழுத்தத்தினால் தான் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் ரமோஸ் கூறினார்.
இந்நிலையில், வலசி ரமோசை பணி நீக்கம் செய்தமை தவறானது என தொழில் பிணக்கு ஆணையகம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவருக்கு பிரித்தானிய தபால் திணைக்களம் இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இழப்பீடு குறி;த்து மற்றொரு விசாரணை அமர்வில் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM