ஜனாதிபதியின் கொடியை திருடிச் சென்றவர் சிக்கினார் !

Published By: Vishnu

29 Jul, 2022 | 11:54 AM
image

மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது பொதுமக்கள் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆக்கிரமித்த நிலையில் குறித்த நபர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியைத் திருடியுள்ளார்.

குறித்த நபர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இலட்சினை கொடியை, படுக்கை விரிப்பாக பயன்படுத்தி, சமூக வலைத்தளத்தில் காணொளிகளையும் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், சி.சி.டி.வி. காணொளிகளை மையப்படுத்தி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கைதான சந்தேகநபர், ஐக்கிய மக்கள் சக்தியின் துறைமுக தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் களுதந்திரிகே உதேனி ஜயரத்ன என பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10