உலக இளையோர் திருக்குறள் மன்றத்தின் ஆண்டு நிறைவு விழா

By Digital Desk 5

29 Jul, 2022 | 12:55 PM
image

உலக இளையோர் திருக்குறள் மன்றத்தின் ஆண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. 

இம்மன்றத்தின் அமைப்பாளர் கலாநிதி வாலண்டீனா இளங்கோவனின் தலைமையில் அகில இலங்கை ரீதியாக தமிழ் சார்ந்த பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும் இவ்வமைப்பு சர்வதேச அளவிலும் விரிவடைந்துள்ளது.

இம்மன்றத்தின் கலை ஆலோசகராக விளங்கும் அபிநயக்ஷேத்திரா நடனப்பள்ளியின் இயக்குநர் கலாசூரி திவ்யா சுஜேன் அவர்கள் நடனத்தினூடாக திருக்குறள் சார்ந்த பல ஆடல் தயாரிப்புக்களை முன்வைப்பதை பாராட்டியும், மிருதங்க கலாவித்தகர் பட்டம் பெற்ற நடன ஆசிரியராக இலங்கையில் முதன் முதலாக இணைய வழியினூடாக நட்டுவாங்கப் பட்டயக் கற்கை நெறியை ஆரம்பித்த பணியினை வாழ்த்தியும் நட்டுவ நிரதி என்ற பட்டம் வழங்கி இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.

இதனை யாழ். பல்கலைக்கழக துணை பீடாதிபதி முனைவர் திரு. ஸ்ரீ சற்குணராஜா அவர்கள் வழங்கி வைப்பதையும், மன்றத்தின் உறுப்பினர்களையும் படங்களில் காணலாம்.   

அத்தோடு இரண்டு வயதில் திருக்குறள் சொன்ன ஆதித்திரி சுஜேன், மன்றத்தின் ஆரம்ப உறுப்பினராக  ~தினம் ஒரு திருக்குறள்| செயற்திட்டத்தில் பங்கேற்ற ஆதர்ஷ் சுஜேன் ஆகியோர் நடன நிகழ்வுகளை வழங்கியதோடு, திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற அபிநயக்ஷேத்திரா நடனப்பள்ளி மாணவிகளான காவியா திலீபன், ரோபிணி அருட்செல்வம், செனோஷ்கா நிமலன் ஆகியோரும் சிறப்பு பட்டமளித்து கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து மாணவர்களும் ஆசிரியர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றதும், திருக்குறள் சார்ந்த கட்டுரை, மனனம், பேச்சு, பாடல், நடனம், சித்திரம் போன்ற போட்டிகளில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right