பீடி சுற்றப்பட்டுள்ள இலையின் இறக்குமதிக்கான வரியை 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்தார்.

இதேவேளை, சிகரெட் பக்கெட்டுகளில் காணப்படும் எச்சரிக்கை உருவப்படம் போன்று எதிர்காலத்தில், பீடி மற்றும் சுருட்டுக்கான உருவப்பட எச்சரிக்கையும் விடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

புகையிலை உற்பத்திகளுக்கான வரி 90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.