காணாமல்போன கிளியை கண்டுபிடித்தவர்களுக்கு 3 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா வெகுமதி

Published By: Digital Desk 5

29 Jul, 2022 | 02:26 PM
image

இந்­தி­யாவைச் சேர்ந்த ஒரு தம்­ப­தி­யினர் காணாமல் போன தமது கிளியை கண்­டு­பி­டித்துக் கொடுத்­த­வர்­க­ளுக்கு 85,000 இந்­திய ரூபா (சுமார் 378,000 இலங்கை ரூபா) வெகு­மதி வழங்­கி­யுள்­ளனர்.

கர்­நா­டகா மாநி­லத்தைச் சேர்ந்த அர்ஜூன் ஷெட்டி என்­பவர் சாம்பல் நிற­மான இரு ஆபி­ரிக்க கிளி­களை வளர்த்து வந்தார். ருஸ்­டோமா மற்றும் ரியோ என அவற்­றுக்குப் பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தது.

அண்­மையில் அவற்றின் கூடு திறந்­து­வி­டப்­பட்­டி­ருந்த நிலையில்,  ருஸ்­டோமா எனும் கிளி பறந்து சென்­று­விட்­டது. 

இக்­கி­ளியை கண்­டு­பி­டிக்க உத­வு­ப­வர்­க­ளுக்கு 50,000 இந்­திய ரூபா (சுமார் 222,000 இலங்கை ரூபா) வழங்­கு­வ­தாக அர்ஜுன் ரெட்டி தம்­ப­தி­யினர் அறி­வித்­தனர். கிளி ஒன்­றுக்கு இவ்­வ­ளவு பணம் வழங்க முன்­வந்­தமை ஊட­கங்­களில் செய்­தி­யா­கி­யது.

 

5 நாட்­களின் பின்னர் தொழி­லா­ளர்கள் இருவர் இக்­கி­ளியை கண்­டு­பி­டித்து, அர்ஜுன் ரெட்டி குடும்­பத்­தி­ன­ரிடம் சேர்த்­தனர். 

இக்­கு­டும்­பத்தின் வீட்­டி­லி­ருந்து சுமார் 3 கிலோ­மீற்றர் தொலைவில் மேற்­படி கிளி கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இக்­கிளி மீளக் கிடைத்­ததால், மிக மகிழ்ச்சியடைந்த அக்குடும்பத்தினர் மேற்படி தொழிலாளர்களுக்கு 85,000 இந்திய ரூபாவை வெகுமதியாக வழங்கியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்