புலி ஒன்று வீதியைக் கடப்பதற்கு உதவியாக, வீதியிலுள்ள வாகனங்களை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காத்திருக்கச் செய்தபோது பிடிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நெடுஞ்சாலையொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி வீடியோவில், போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாகனங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறார்.
அப்போது வீதி ஓரத்திலிருந்து புலி ஒன்று வெளிவருகிறது. அதையடுத்து, அப்புலி பாதுகாப்பாக கடந்து செல்வதற்காக அனைவரையும் காத்திருக்குமாறு அவர் சமிக்ஞை காட்டுகிறார்.
அதன்பின், புலியானது வீதியைக் கடந்து மறுபுறம் செல்கிறது.
இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி ப்ரவீன் காஸ்வான் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த டுவீட்டிற்கு 'புலிக்கு மட்டுமே பச்சை சமிக்ஞை' என்று அவர் தலைப்பிட்டுள்ளார்.
மேற்படி வீடியோ ஒரு இலட்சம் தடவைகளுக்கு அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM