நியூயோர்க் நகரைச் சேர்ந்த பிரபல மத போதகர் ஒருவர் தேவாலயத்தில் பிரசங்கம் நடத்திக்கொண்டிருந்தபோது, அவரிடமிருந்த லட்சக்கணக்கான டொலர் பெறுமதியான நகைகள் துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றக்கழமை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட பிரசங்கத்தின்போது இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது,
நியூ யோர்க்கின் புரூக்களின் பகுதியைச் சேர்ந்த பிஷப் லமோர் மில்லர் வைட்ஹெட்டிடமிருந்தே இந்நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
44 வயதான லமோர் மில்லர் வைட்ஹெட், தனது ஆடம்பர வாழ்க்கை பாணி வாழ்க்கை மூலமும் பிரபலமானவர். நியூ யோர்க் நகர மேயர் எரிக் அடம்ஸுடனான நட்பினாலும் பிரபலமானவர் அவர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்தில் அவர் பிரசங்கம் நடத்திக்கொண்டிருந்தபோது, துப்பாக்கி ஏந்திய மூவர் நகைகளை கொள்ளையடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கியை காண்பித்த கொள்ளையர்கள், லமோர் மில்லர் வைட்ஹெட் மற்றும் அவரின் மனைவியிடமிருந்து நகைகளை தருமாறு கேட்டனர். பின்னர் அவற்றை எடுத்துக்கொண்டு வெள்ளை மேர்சிடிஸ் ரக காரில் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்டனர் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் பெறுமதி சுமார் 400,000 டொலர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் அவை 10 லட்சம் டொலர் பெறுமதியானவை என லமோர் மில்லர் வைட்ஹெட் தெரிவித்துள்ளார்.
75,000 டொலர் பெறுமதியான ரோலெக்ஸ் கடிகார்ம, 25,000 டொலர் பெறுமதியான வைரம், மாணிக்கக்கல் பதித்த மோதிரங்கள், 25,00 டொலர் பெறுமதியான காதணிகள் ஆகியனவும் இவற்றில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசங்கம் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நிலையில், கறுப்பு முகக்கவசம் கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த காட்சிகளும் கெமராவில் பதிவாகியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM