யாழ். பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ கற்கையில் முதுமாணி ஆரம்பம்

By Digital Desk 5

29 Jul, 2022 | 10:17 AM
image

( எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப் படிப்புகள் பீடத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ கற்கையில் முதுமாணி (Master of Christian Studies) முதலாம் அணி மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு புதன்கிழமை, மாலை 4.00 மணியளவில் பலாலி வீதி, திருநெல்வேலியில் அமைந்துள்ள உயர் பட்டப் படிப்புகள் பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் மறை மாவட்டப் ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி. ஞானப்பிரகாசம், மன்னார் மறை மாவட்டப் ஆயர் கலாநிதி எவ். எல். இம்மானுவல் பெர்ணாண்டோ, திருகோணமலை மறை மாவட்டப் ஆயர் கலாநிதி நோயல் இம்மானுவல் மற்றும் தென்னிந்தியத் திருச்சபையின் இளைப்பாறிய பேராயர் கலாநிதி எஸ். ஜெபநேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர். 

யாழ். பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்களான பேராசிரியர் என். சண்முகலிங்கன், வாழ் நாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை மற்றும் கிறிஸ்தவ நாகரிகத்துறையின் முன்னாள் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, கிறிஸ்தவ நாகரிகத்துறையின் தலைவர் அருட்பணியாளர் கலாநிதி ஜே. சி. போல் றொகான், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள்,  யாழ். மறைமாவட்டத்தைச் சேர்ந்த மதகுருமார், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கிறிஸ்தவ கற்கையில் முதுமாணி கற்கை நெறிக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right