(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றில் இடம்பெற்ற புதிய ஜனாதிபதி தெரிவில் நான் வெற்றிப் பெற்றிருந்தால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 8 ஆவது ஜனாதிபதியாக கருதப்பட்டிருப்பேன். பாராளுமன்றத்தில் மக்களின் குரலுக்கும், கோரிக்கைகளுக்கும் தற்போது இடமில்லை. வெகுவிரைவில் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அவசரகால சட்டத்தினால் ஏற்படும் விளைவுகளை கருத்திற் கொண்டு நாங்கள் அதற்கு எதிராக வாக்களித்தோம்.
அவசரகால சட்டம் பாராளுமன்றிற்கு கொண்டு வருவதற்கு முன்னர் அது தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டவர்கள், அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதாகவும், ஏனையோர் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளாமல் அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டார்கள்.
அதற்கமைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் உட்பட ஐந்து பேர் அவசர கால சட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளதுடன்,பொதுஜன பெரமுனவின் 33 பேர் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளாமல் அரசாங்கத்திற்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரச தலைவருக்கு உண்டு.மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை அதிகாரத்தை கொண்டு முடக்க முயற்சித்தால் அது எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். என்பதை ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.
அனைத்து தரப்பினரது எதிர்பார்ப்பிற்கமைய ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ஷ வெற்றிப்பெற்றார்.இருப்பினும் அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளினால் முழு அரசியல் கட்டமைப்பும் பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டது.
தவறுகளை திருத்திக்கொள்ளுமாறு அரசாங்கத்திற்குள் இருந்துக் கொண்டு போராடினோம்.இருப்பினும் எமது ஆலோசனைகளுக்கு எவரும் மதிப்பளிக்கவில்லை.அதன் விளைவு எவரும் எதிர்பார்க்காத அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்றில் இடம்பெற்ற புதிய ஜனாதிபதி தெரிவில் நான் வெற்றிப் பெற்றிருந்தால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 8ஆவது ஜனாதிபதியாக கருதப்பட்டிருப்பேன். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முழுமையாக நீக்கப்பட வேண்டும். சகல பிரச்சினைகளுக்கும் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை பிரதான காரணியாக உள்ளது.
பாராளுமன்றத்தில் மக்களின் குரலுக்கும்,எதிர்பார்ப்பிற்கும் மதிப்பளிக்கப்படுவதில்லை. வெகுவிரைவில் மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய மாற்றம் ஏற்படும்.பாராளுமன்றத்தின் பலத்தை காட்டிலும் மக்கள் ஆதரவு எமக்கும்,மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் உள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM