இலங்கை வீர, வீராங்கனைகள் 7 வகையான போட்டிகளில் நாளை பங்கேற்பு

28 Jul, 2022 | 08:52 PM
image

(பேர்மிங்ஹாமிலிருந்து நெவில் அன்தனி)

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற 22 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவைத் தொடர்ந்து முதலாம் நாளான வெள்ளியன்று (29) நடைபெறவுள்ள போட்டி நிகழ்ச்சிகளில் இலங்கை வீர, வீராங்கனைகள் பலர் பங்குபற்றவுள்ளனர்.

அணிக்கு எழுவர் றக்பி, நீச்சல், பட்மின்டன், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ் (கலையம்சம்), ஸ்கொஷ், அணிக்கு மூவர் (3 x 3) கூடைப்பந்தாட்டம் ஆகிய 7 வகையான விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வீர, வீராங்கனைகள் போட்டியிடவுள்ளனர்.

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை பங்குபற்றவுள்ள முதலாவது போட்டி நிகழ்ச்சி அணிக்கு எழுவர் றக்பி போட்டி ஆகும்.

கொவென்ட்றி விளையாட்டரங்கில் இங்கிலாந்து நேரப்படி காலை 9.00 மணிக்கு (இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணி) அணிக்கு எழுவர் றக்பி ஆரம்பமாகவுள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் மிகவும் பலம்வாய்ந்த அணிகளை இலங்கை அணிகள் எதிர்த்தாடவுள்ளதால் இலங்கைக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.

ஆண்களுக்கான ஏ குழுவில் இங்கிலாந்து, நியூஸிலாந்து, கனடா ஆகிய அணிகளுடன் இடம்பெறும் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்தாடவுள்ளது.

இதேவேளை பெண்களுக்கான ஏ குழுவில் இங்கிலாந்து, நியூஸிலாந்து, சமோஆ ஆகிய அணிகளுடன் இடம்பெறும் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் இங்கலாந்தை சந்திக்கவுள்ளது.

அணிக்கு எழுவர் றக்பியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவுகளில் தலா 4 குழுக்களில் மொத்தம் 16 நாடுகள் பங்குபற்றுகின்றன.

அரினா பேர்மிங்ஹாம் உள்ளக விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இங்கிலாந்து நேரப்படி 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள அணி நிலை கலையம்ச ஜிம்னாஸ்டிக்ஸ் திறன் காண் போட்டியில் இலங்கை சார்பாக கயஷான் குமாரசிங்க, ருச்சிர பெர்னாண்டோ, ஜூட் மலின் பெர்னாண்டோ ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

ஸ்மெத்விக், சாண்ட்வெல் நீர்நிலை தடாகத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நீச்சல் போட்டியில் ஆடவருக்கான 50 மீற்றர் வண்ணத்துப்பூச்சிவகை (பட்டர்ப்ளை) திறன்காண் சுற்றில் இலங்கையின் நட்சத்திர நீச்சல் வீரர் அக்கலன்க பீரிஸ் பங்குபற்றுகிறார். அவர் திறன்காண் சுற்றில் திறமையை வெளிப்படுத்தி அடுத்த சுற்றுக்கு தெரிவாவார் என  எதிர்பார்க்கப்படுகிறது.

என்.ஈ.சி. இலக்கம் 5 அரங்கில் நடைபெறவுள்ள அணிக்கு மூவர் கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கையின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் விளையாடவுள்ளனர்.

ஆண்கள் பிரிவில் ஸ்கொட்லாந்தையும் பெண்கள் பிரிவில் கென்யாவையும் இலங்கை அணிகள் எதிர்கொள்ளவுள்ளன.

கலப்பு பிரிவினருக்கான அணி நிலை முதலாவது தகுதிகாண் சுற்று பட்மின்டன் போட்டியில் அவுஸ்திரேலியாவை இலங்கை எதிர்த்தாடவுள்ளது. இப் போட்டி என்   .ஈ.சி. இலக்கம் 5 அரங்கில் பிற்பகல் நடைபெறவுள்ளது.

புவனேக்க குணதிலக்க, சச்சின் டயஸ், தில்லினி ஹெந்தஹேவா, விதார சுஹாஸ்னி ஆகியோர் கலப்பு இரட்டையர் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.

பேர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஸ்கொஷ் அரங்கில் நடைபெறவுள்ள 64 வீரர்கள் சுற்றுக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.

ஸ்கொஷ் அணியில் ரவிந்து லக்சிறி, ஷமில் வக்கீல், எஹெமி வொனாரா, சனித்மா சினாலி ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

ரவிந்து லக்சிறி அண்மையில் நடைபெற்ற சர்வதேச ஸ்கொஷ் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்களுடன் விளையாடி ஒரு போட்டியில் இரண்டாம் இடத்தையும் மற்றொரு போட்டியில் சம்பியன் பட்டத்தையும் சூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு பதக்கம் கிடைக்கக்கூடியதென எதிர்பார்க்கப்படும் குத்துச்சண்டைப் போட்டியும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

ஆண்களுக்கான 60 - 63 கிலோ கிராம் எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இங்கிலாந்தின் ஜோசப் டியர்ஸை சஞ்சீவ பண்டார ராஜகருண எதிர்த்தாடவுள்ளார்.

இலங்கையில் இந்த வருடம் நடைபெற்ற லேட்டன் கிண்ண குத்துச் சண்டைப் போட்டியில் ஆண்கள் பிரிவில் அதிசிறந்த குத்துச் சண்டை வீரர் விருதை சஞ்சீவ பண்டார ராஜகருண வென்றிருந்தார். இவ் வருட லேட்டன் கிண்ண குத்துச்சண்டை போட்டி பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான திறன்காண் போட்டியாகவும் அமைந்தது.

பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக 110 வீர, வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர்.

பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும்    72 நாடுகளைச் சேர்ந்த சுமார் 5,000 வீர, வீராங்கனைகள் 20 வகையான விளையாட்டுக்களில் பங்குபற்றுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்பெய்ன் கால்பந்து அணியின் பயிற்றுநர் நீக்கப்பட்டார்:...

2022-12-08 18:28:45
news-image

தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம்...

2022-12-08 17:43:11
news-image

ரசிகர்களின் கோஷங்களால் குரோஷியாவுக்கு பீபா 1.94...

2022-12-08 16:12:46
news-image

வரலாறு படைத்தது வத்தளை லைசியம்; நந்துன்,...

2022-12-08 16:14:19
news-image

நான்கு பற்களை இழந்தார் சாமிக நேற்றைய...

2022-12-08 10:46:41
news-image

க்ளடியேட்டர்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ப்றத்வெய்ட்,...

2022-12-08 10:09:41
news-image

மெஹிதி ஹசன் மிராசின் சகலதுறை ஆட்டத்தால்...

2022-12-07 21:48:33
news-image

தீக்ஷன, வியாஸ்காந்த், சதீர, அவிஷ்க அபாரம்...

2022-12-07 21:42:13
news-image

நியூ ஸிலாந்து றக்பி தலைவராக முதல்...

2022-12-07 13:11:52
news-image

ரமொஸின் ஹெட்-ரிக் கோல்களின் உதவியுடன் கால்...

2022-12-07 10:24:18
news-image

சாதனைகள் நிலைநாட்டி வெற்றியீட்டிய கண்டி ஃபெல்கன்ஸ்

2022-12-07 09:41:16
news-image

பெனல்டியில் ஸ்பெய்னை வென்ற மொரோக்கோ கால்...

2022-12-06 23:45:38