தொழில் நிமித்தம் காரணமாக சவூதி அரேபியாவில் வசித்து வரும் இலங்கை இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இலங்கையில் காத்தான்குடி-05, மார்கட் வீதியைச் சேர்ந்த முஹம்மத் ஆஷிக் (வயது 32) என்பவரே காணாமல் போயுள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் இலங்கையிலுள்ள சவூதி அரேபியா தூதரகம் மற்றும் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்திலும் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும் குடும்பத்தினர் மேலும் தெரிவித்தனர்.

ரியாத்தில் உள்ள தனியார் கம்பனி ஒன்றில் பணியாளராக கடமை புரிந்து வரும் இவர் கடந்த 18.10.2016 முதல் அன்று முதல் காணாமல் போயுள்ளார்.

இவர் காத்தான்குடி மௌலவி முஹம்மத் மஹ்றூபின் புதல்வர் ஆவார்.

முஹம்மத் ஆஷிக் பற்றி தகவலறிந்தால் பின்வரும் தொடர்பு இலக்கங்களுக்கு அறியத்தருமாறு அவரின் குடும்பத்தினர் வேண்டிக்கொள்கின்றனர்.

முஹம்மத் றமீஸ் – 0096 552244041

முஹம்மத் ஜெளபர் – 0094 776011399

முஹம்மத் சிராஜுதீன் – 0094 776167935

-அப்துல் கையூம்