வெலிக்கடை இனப்படுகொலையின் 39 ஆம் ஆண்டு நினைவு நாள்

By T Yuwaraj

28 Jul, 2022 | 03:25 PM
image

வெலிக்கடை இனப்படுகொலையின் 39 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு திருகோணமலையில் உள்ள வெலிக்கடைத் தியாகிகள் நினைவு அரங்கில் நேற்று (27)  புதன்கிழமை மாலை 5.40 மணிக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் நிர்வாகச் செயலாளர் நித்தி மாஸ்டர் தலைமையில் இடம்பெற்றது.

1983 ஆம் ஆண்டு ஜூலை 25,  27 ஆம் திகதிகளில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை,  ஜெகன் உட்பட 53 வீரமறவர்களுக்கு இதன் போது நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவு நிகழ்வு இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினர் க. சிங்கம் உட்பட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right