பண்டாரநாயக்க உருவச் சிலை அருகே வைத்து கைது செய்யப்பட்ட நால்வருக்கும் விளக்கமறியல்

Published By: Digital Desk 4

27 Jul, 2022 | 08:07 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

நீதிமன்ற உத்தரவை மீறி காலி முகத்திடல் முன்பாக உள்ள பண்டாரநாயக்க உருவச் சிலை அருகில் தங்கியிருந்த 04 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும்  29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த  கோரள வல்பிட்டகே ஏக்கநாயக்க சரத்  தர்மசேனகே ரோஹன குமார,  கொழும்பு 7 ஐ சேர்ந்த  ரணசிங்க ஆரச்சிலாகே சானக மதுசங்க,  கம்பஹாவை செர்ந்த  சந்ததாச டிக்சன்,  கொழும்பு 9 ஐ சேர்ந்த  மொஹம்மட் சஹ்ரான் சும்ரி ஆகியோரே இவ்வாறு  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.

பண்டாரநாயக்க உருவச் சிலையிலிருந்து 50 மீட்டருக்கு உட்பட்ட பகுதிக்குள் தங்கியிருந்தமையால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

காலி முகத்திடலிலுள்ள பண்டாரநாயக்க உருவச் சிலை காணப்படும் பகுதியில் 50 மீட்டர் சுற்றுவட்டத்திற்குள் பிரவேசிக்க தடை விதித்து, கொழும்பு கோட்டை நீதவான் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய, நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15