நாட்டை அராஜக நிலைக்கு கொண்டுசெல்ல போராட்டக்கார்களுக்கு இடமளிக்க முடியாது - விமல்

Published By: Digital Desk 4

27 Jul, 2022 | 07:49 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பொருளாதார ரீதியில் நாட்டை முன்னேற்ற போராட வேண்டிய நேரத்தில் நாட்டை அராஜக நிலைக்கு கொண்டுசெல்ல இடமளிக்க முடியாது.

அதனால் ஆர்ப்பாட்டக்கரர்கள் கோ ஹோம் என தெரிவிக்காமல் யாரை ஜனாதிபதியாக்கவேண்டும் என தெரிவித்தால், அவரை கொண்டுவருவோம்  என எதிர்க்கட்சியில்  சுயாதீனமாக இயங்கும் கட்சிகளை சேர்ந்த தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

Articles Tagged Under: விமல் வீரவன்ச | Virakesari.lk

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டத்துக்கான பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின் போது நாங்கள் உட்பட டளஸ் அழகப்பெருமவுக்கே எதிர்க்கட்சிகள் வாக்களித்தன.

ஆனால் இறுதியில் ரணில் விக்கிரமசிங்கவே தெரிவாகினார். ஆனால் டளஸ் அழகப்பெரும பதவியேற்றிருந்தால் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியுமாக இருந்திருக்கும். அந்த் நோக்கத்திலே நாங்கள் டளஸ் அழகப்பெருமவை ஆதரிக்க தீர்மானித்தோம்.

இந்த நாட்டில் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் பெருமளவான மக்கள் கொழும்புக்கு வந்த நிலையில், ஜனாதிபதியாக இருந்த கோத்தாபய ராஜபக்‌ஷ பதவி விலகிச் சென்றார்.

அப்போது கோட்டா கோ ஹோம் போராட்டமாக நடந்தது. அதனுடன் முடிவடைந்துவிடும் என்று நினைத்த போதும், அடுத்த 9 ஆம் திகதி இன்னுமொருவரை விரட்ட நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார்.

இதன்பின்னர் தினேஷ் கோ ஹோம் என்ற போராட்டமும் தொடங்கும். அப்படியே கூறிக்கொண்டிருந்தால் யாரை கொண்டு வரப் போகின்றீர்கள். 

ஆர்ப்பாட்டக்கரர்கள் கோ ஹோம் என தெரிவிக்காமல் யாரை ஜனாதிபதியாக்கவேண்டும் என தெரிவித்தால், அவரை கொண்டுவருவோம்.

இப்படியே சென்றால் எப்போது பொருளாதாரத்தை கட்டியெழுப்பப் போகின்றோம். இருக்கும் ஆட்சி தொடர்பாக எங்களிடையே விமர்சனங்கள் உள்ளன. அதனை வேறு வகையில் தீர்த்துக்கொள்ள முடியும்.

ஆனால் இதனை லிபியா அல்லது ஆபிரக்காவின் நாடுகள்  போன்று காட்டுவதா போராட்டத்தின் நோக்கம். இலட்சக் கணக்கான மக்களின் நியாயமான கோரிக்கைகளை நாங்கள் நிராகரிக்கவில்லை.

ஆனால் இப்போது இருப்பது அரசை வீழ்ச்சியடைய செய்ய முயற்சியே முன்னெடுக்கப்படுகின்றன. எனக்கு ரணிலிடம் அமைச்சுப் பதவி அவசியமில்லை. நாங்கள் பொருளாதார ரீதியில் மேலெழுந்து வரும் போது, எமக்கென அரசு இருக்க வேண்டும்.

மேலும் போராட்டக்காரர்கள் அமைதிப்போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றியமை அமைதிப் போராட்டமா? பாராளுமன்றத்திற்கும் வந்தனர். 

சரியான நேரத்தில் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கைகளை எடுத்திருக்காவிட்டால் என்னவாகியிருக்கும். ஐக்கிய நாடுகள் அமைதிப் படையிடம் கேளுங்கள் உலகிலேயே சிறந்த இராணுவம் இங்கேயே உள்ளது.

அன்று பாராளுமன்றத்தை கைப்பற்றியிருந்தால் அரசு என்ற ஒன்று இருந்திருக்குமா?. எமது பொருளாதார நெருக்கடியை அரசை வீழ்த்தும் முயற்சிக்காக பயன்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். அதற்கு இடமளிக்க முடியாது.

சிலர் ஐ.நா. அலுவலகம் செல்கின்றனர்.  ஸ்ரீதரன் போன்றோர் வடக்கிற்கு வெளிநாட்டு இராணுவத்தை கேட்டுச் செல்கின்றனர். இப்படி நடந்தால் வடக்கில் இராணுவத்தை நீக்க நடவடிக்கை எடுக்கலாம்.

அடுத்ததாக கூரகலயிலும் நடவடிக்கை எடுக்கலாம். இப்படி நாட்டை சீரழிவுக்கு கொண்டு செல்ல இடமளிக்கக் கூடாது. எந்தக் கட்டத்திலும் அரசை வீழ்ச்சியடைய இடமளிக்க முடியாது.

அதனால் அராஜகத்திற்கு இடமளித்தால் வடக்கு, கிழக்கு என்று பிரிந்துசெல்லும் நிலைமையும் ஏற்படும். இதனால் நாட்டை பாதுகாப்பதற்காக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33