இலங்கை பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவேளை இந்தியா துரிதமாக உதவியது - சீனா உதவிக்கான குரலிற்கு பதிலளிக்கவில்லை- சமந்தா பவர்

Published By: Rajeeban

27 Jul, 2022 | 04:42 PM
image

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு இந்தியா துரிதமாக உதவியது ஆனால் உதவிக்காக விடுக்கப்பட்ட வேண்டுகோள்களிற்கு சீனா பதிலளிக்கவில்லை என யுஎஸ்எயிட்டின் தலைமை நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சமந்தா பவர் அங்கு இதனை தெரிவித்துள்ளார்.

புதுடில்லி ஐஐடியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான உதவும் மிக முக்கியமான நடவடிக்கைகளுடன் இந்தியா துரிதமாக பதில்நடவடிக்கையில் ஈடுபட்டது என சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் சீனா கணிசமான நிவாரணத்தை  என்ற வேண்டுகோள்களிற்கு இறுதிவரை பதில்அளிக்கப்படவில்லை எனவும்  சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய கடன்வழங்குநர்களை விட வெளிப்படை தன்மையற்ற கடன்களை உயர் வட்டிக்கு வழங்கியதன் மூலம் சீனா இலங்கைக்கு பெருமளவு கடன்வழங்கிய நாடாக மாறியது என குறிப்பிட்டுள்ள சமந்தா பவர் இலங்கை;ககு உதவுவதற்காக சீனா கடன்மறுசீரமைப்பில் ஈடுபடுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா மிகவேகமாக முற்றிலும் முக்கியமான நடவடிக்கைகளுடன் விரைந்தது எனவும் தெரிவித்துள்ள அவர் இலங்கை வங்குரோத்து நிலையையும் மேலும் வீழ்ச்சியையும் தடுப்பதற்பு உதவுவதற்காக இலங்கைக்கு இந்தியா வழங்கிய 3.5 பில்லியன் டொலர் கடனுதவி குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் 2000 ம் ஆண்டு முதல் அதிகளவில் இலங்கைக்கு விரும்பி கடனுதவி வழங்கிய சீனா இந்தியாவிற்கு நேர்மாறான விதத்தில்செயற்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தசாப்தகாலத்தில் இலங்கைக்கு வெளிப்படைதன்மையற்ற அதிக வட்டியுடனான கடன்களை வழங்கியதன் மூலமும்,மிகச்சிறிய வருமானத்தை கூட பெற்றுத்தராத கப்பல்கள் ஒருபோதும் பயன்படுத்தாத பாரிய துறைமுகம் உட்பட சந்தேகத்திற்குரிய நடைமுறைப்பயன்பாட்டுக்குரிய உட்கட்டமைப்பு திட்டங்களிற்கு உதவி வழங்கியதன் மூலமும் சீனா இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக மாறியது எனவும் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் நெருக்கடியை எதிர்கொள்ளும் தருணங்களில் இந்தியா உதவியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனா இலங்கைக்கு கடனுதவி வழங்குவதாக உறுதியளித்தது ஆனால்  அவற்றை வழங்கவில்லை,என தெரிவித்துள்ள சமந்தா பவர் தனது உரையில் ஜனநாயக கொள்கைகளை கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01