(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம். வசீம்)
போராட்டத்தில் ஈடுபடும் மக்களை வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள் என குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.
ஊழல் மோசடியாளர்களை பாதுகாக்க சென்று இராணுவத்தினர் தமது புகழை இல்லாதொழித்துக்கொள்ள வேண்டாம்.
ஆகஸ்ட் 09 ஆம் திகதி சகலரும் கொழும்பில் ஒன்றிணைந்து மக்கள் போராட்டத்தின் பலத்தை ஜனாதிபதிக்கு கற்பிக்க வேண்டும்.
பிரதமர் தினேஷ் குணவர்தன பதில் ஜனாதிபதியாக வாய்ப்புள்ளது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் புதன்கிழமை (27) இடம்பெற்ற அவசரகால சட்டத்தின் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்;டு மக்களின் பாதுகாப்பிற்காகவும்,வாழ்வாதாரத்திற்காகவும் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்படவில்லை, மாறாக மக்களால் வெறுக்கப்படும் ஊழல் மோசடியான அரசியல்வாதிகளை பாதுகாப்பதற்காக அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது.கருத்து சுதந்திரம் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மோசடியான ஆட்சியாளர்களினால் இலங்கை வாழ தகுதியற்ற நாடாக மாறியுள்ளது. வாழ்க்கை செலவு மக்களால் பொருத்துக்கொள்ள முடியாத அளவிற்கு உயர்வடைந்து செல்கிறது.எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கிறது.
வாழ்க்கை செலவினாலும், வாழ முடியாத நிலையினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வீதிக்கிறங்கி போராடும் மக்களை வன்முறையாளர்கள் எனவும், கலவரகாரகள் எனவும் பெயர் சூட்டுவது முற்றிலும் தவறானது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த போது குறிப்பிட்டார் நெருக்கடி நிலை மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் என தற்போது குறிப்பிடுகிறார் நெருக்கடி நிலை ஒருவருட காலத்திற்கு நீடிக்கும் என்று மக்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்த வேண்டாம், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் காலி முகத்திடலில் மாத்திரம் வரையறுக்கப்பட்டது என ஜனாதிபதி கருத கூடாது,22 இலட்ச மக்களும் போராட்டத்தில் தான் உள்ளார்கள் என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
69 இலட்ச மக்களின் வாக்கினை பெற்ற ஜனாதிபதியை மக்கள் போராட்டம் புறக்கணித்துள்ளது,மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் போராட்டம் வெகுவிரைவில் புறக்கணிக்கும்.
மக்கள் போராட்டம் நியாயமானது. இலங்கை இராணுவத்தினருக்கு தனித்த புகழ் உள்ளது.ஊழல் ஆட்சியாளர்களை பாதுகாப்பதற்காக மக்களுக்கு எதிராக சென்று புகழை இல்லாதொழித்துக்கொள்ள வேண்டாம்,ஏனெனில் 22 இலட்ச மக்களும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள்.
எதிர்வரும் மாதம் 09ம் ஆம் திகதி நாட்டு மக்கள் அனைவரும் கொழும்பில் ஒன்றினைந்து போராட்டத்தை பலப்படுத்த வேண்டும்.அதிகாரத்தை கொண்டு மக்கள் போராட்டத்தை அடக்க முடியாது என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளங்கிக்கொள்ள வேண்டும்.பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்ய வாய்ப்புள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM