(சசி)

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு 9.30 மணிக்கு புறப்பட்ட  கல்முனை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி மீது இனந்தெரியாதோரால் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10.15 மணியளவில் மட்டக்களப்பு கல்லடிக்கு அண்மித்த பிரதேசத்தில் வைத்தே   இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

              

இச் சம்பவத்தில் சாரதி எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளதுடன் குறித்த பஸ்ஸில் பயணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

 இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.