சமந்தா பவர் இந்தியாவில் - இலங்கை நிலவரம் குறித்தும் பேச்சுவார்த்தை

Published By: Rajeeban

27 Jul, 2022 | 02:47 PM
image

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள யுஎஸ்எயிட்டின் தலைமை நிர்வாகி சமந்தா பவர் இலங்கை நிலவரம் குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

சமந்தா பவர் 25 முதல்  27 ம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் நெருக்கடி மற்றும் உணவு நெருக்கடி காலநிலை மாற்றம் போன்ற சர்வதேச விவகாரங்கள் இந்தியாவில் சமந்தா பவர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் முக்கியமாக இடம்பெற்றிருந்தன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

26ம் திகதி சமந்தா பவர் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கருத்துசுதந்திரம் சிறுபான்மை குழுக்களின் உரிமைகளை பாதுகாப்பது உட்பட பல விடயங்கள்குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை முன்னேற்றுவதற்காக சிவில் சமூகத்துடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவது குறித்த அமெரிக்காவின் அர்ப்பணிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் வெளிவிவகார செயலாளரையும் சமந்தா பவர் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவும் அமெரிக்காவும் மூலோபாய சகாக்கள் மற்றும் பல அபிவிருத்தி விவகாரங்களில் ஒத்துழைப்பாளர்கள் என்பதை மீள உறுதி செய்வதே இந்த  சந்திப்பின் நோக்கம்  என தெரிவித்துள்ள யுஎஸ்எயிட்டின் பதில் பேச்சாளர் செஜால் புலிவர்ட்டிரி அவர்கள் பிராந்தியம் குறித்தும் இந்தியாவின் தலைமைத்துவம் குறித்தும் இலங்கை பொருளாதார நெருக்கடி யை எதிர்கொண்டுள்ள தருணத்தில் அமெரிக்காவின் உதவி குறித்தும் ஆராய்ந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04