அவசரகால சட்டத்திற்கு எதிரானவர்கள் தீவிரவாதத்திற்கு துணை செல்பவர்களாக கருதப்படுவர் - பிரசன்ன ரணதுங்க

Published By: Digital Desk 3

27 Jul, 2022 | 03:36 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம். வசீம்)

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஒதுக்கப்பட்டுள்ள போராட்ட இடம்'  முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும்.போராட்டகாரர்களுக்கு விகாரமாதேவி பூங்காவில் இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும்.

காலி முகத்திடலில் அமைதி வழிபோராட்டம் என்ற பெயரில் போதைப்பொருள் பாவனையாளர்களே ஒன்று கூடியுள்ளார்கள்.

போராட்டத்தை கட்டுப்படுத்தாவிடின் எவரும் உயிர்வாழ முடியாது. ஆகவே அவசரகால சட்டத்திற்கு சகலரும் ஆதரவளிக்க வேண்டும். எதிரானவர்கள் தீவிரவாதத்திற்கு துணை செல்பவர்களாக கருதப்படுவர் என ஆளும் தரப்பின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் புதன்கிழமை (27) இடம்பெற்ற அவசரகால சட்டத்தின் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி செயலகத்தை கைப்பற்றியிருந்த போராட்டகாரர்களை அங்கிருந்து வெளியேற்ற பாதுகாப்பு தரப்பினம் முன்னெடுத்த நடவடிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினர் மாறுப்பட்ட விடயங்களை குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

காலி முகத்திடல் போராட்டகாரர்கள் தங்களின் போராட்டகளத்திற்கு 'கோட்டா கோ கம'என பெயரிட்டிருந்தார்கள்.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து வெளியேற்றுவது போராட்டக்கார்களின் பிரதான நோக்கமாக காணப்பட்டது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என போராட்டகாரர்கள் குறிப்பிட்டார்கள்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து அரசியலமைப்பின் பிரகாரம் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இருப்பினும் காலி முகத்திடல் போராட்டக்கார்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள். கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னரும், காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படுவது பொருத்தமற்றது.

அரசாங்கத்தை வீழ்த்தி, அரசியல் சூழ்ச்சி செய்யும் மையமாக காலி முகத்தில் போராட்டக்களத்தை மாற்றியமைக்க முடியாது.

அமைதி வழி போராட்டக்காரர்களை முன்னிலைப்படுத்தி போதைப்பொருள் பாவனையாளர்கள், கொள்ளையர்கள் மற்றும் பாதாள குழுவினர் போராட்டத்தை வழிநடத்தினார்கள். அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இவர்களுக்கு ஆதரவு வழங்கினார்கள்.

நாட்டை  மாற்றியமைப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள்.

போராட்டக்களத்தில்  கோட்டா கோ கம  பெயரை மாற்றி பிறிதொரு பெயரை சூட்டி மீண்டும் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆகவே தொடர்ந்து இவர்கள் இங்கு போராடுவதற்கு தார்மீக உரிமையில்லை.

காலி முகத்திடல் போராட்டக்களத்தை அண்மித்த பகுதியில் சுற்றுலா ஹோட்டல்கள், துறைமுக நகரம் அமையப்பெற்றுள்ளது.

பாதுகாப்பற்ற போராட்டங்களினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுவதுடன்,காலி முகத்திடல் போராட்டகார்களினால் பொது சொத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோத  கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களின் செயற்பாடு நகர அபிவிருத்தி  அதிகார சபை சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானர்து. அமைதி வழி போராட்டம் என்ற பெயரில் வன்முறையான போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

போதைப்பொருள் பாவனையாளர்களின் பாதுகாப்பு இடமாகவும், சட்டவிரோத செயற்பாடுகளுக்கான மையமாகவும் காலி முகத்திடல் போராட்டக்களம் உள்ளது. நாட்டின் பிரதான கேந்திர மையமான காலி முகத்திடலில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எவ்வாறு தொடர்ந்து இடமளிக்க முடியும்.அரசியல் நோக்கமற்ற வகையில் இவ்விடயத்தை பொறுப்புடன் ஆராய வேண்டும்.

மக்களாணையுடன் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முடியாத அரசியல் தரப்பினர் போராட்டங்கள் ஊடாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். முப்படையினர் ஜனநாயகத்தை பாதுகாத்துள்ளார்கள். இராணுவத்தினராலேயே பாராளுமன்றம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பிற்காகவே அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் போராட்டகாரர்களின் உண்மை நோக்கத்தை விளங்கிக்கொண்டார்கள்.

காலிமுகத்திடலில் போதைப்பொருள் போராட்டகாரர்கள் தான் தற்போது உள்ளார்கள். போராட்டத்தை கட்டுப்படுத்தாவிடின் எவருக்கும் உயிர்வாழ முடியாத நிலை ஏற்படும்.

காலி முகத்திடலில் ஒதுக்கப்பட்டுள்ள போராட்ட களம் இடத்தை பிறிதொரு இடத்திற்கு மாற்றியமைப்பது அவசியமாகும்.பொருளாதார கேந்திர மையத்திற்கு மத்தியில் போராட்டகளம் காணப்படுவது பொருத்தமற்றது.

முப்படையினரினருக்கு மதிப்பளிக்க வேண்டும். காலி முகத்திடல் போராட்டகாரர்கள் இராணுவத்தினரையும், பொலிஸாரையும் மிக கீழ்த்தரமான முறையில் விமர்சித்தார்கள். அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களிப்பவர்கள் தீவிரவாதத்திற்கு ஆதரவாளர்களாக கருதப்படுவார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து...

2025-01-17 08:59:23
news-image

சிவில் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி, தோட்டாக்களுடன்...

2025-01-17 09:09:49
news-image

இன்றைய வானிலை

2025-01-17 06:20:17
news-image

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம்...

2025-01-17 05:22:45
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு: ...

2025-01-17 05:07:35
news-image

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம்...

2025-01-17 05:01:39
news-image

இலங்கை இந்திய மீனவர் விவகாரம் :...

2025-01-17 04:53:30
news-image

சுகாதார சேவைக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்யான...

2025-01-17 04:47:55
news-image

சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை...

2025-01-17 04:42:19
news-image

30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம்...

2025-01-17 04:35:37
news-image

பஸ் - மோட்டார் சைக்கிள் விபத்தில்...

2025-01-17 04:30:34
news-image

பாராளுமன்றத்தில் மக்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த எதிர்க்கட்சித்...

2025-01-16 13:51:26