(எம்.எப்.எம்.பஸீர்)
பராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன, மீன்பிடி அமைச்சராக இருந்த போது, அவரது இணைப்புச் செயலாளராக இருந்த ஒருவரின் பெயரில் ஆழ் கடலில் மீன் பிடி நடவடிக்கைகளை முன்னெடுக்க என, 8 மீன் பிடி கப்பல்களை தருவித்தமை, முகத்துவாரம் மீன் பிடி துறைமுகத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பிலான நடவடிக்கையின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பிலான வழக்கை வாபஸ் பெறுவதாக சி.ஐ.டி.யினர் நேற்று முன் தினம் (25) நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேராவுக்கு அவர்கள் இதனை அறிவித்தனர்.
நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இந்த விவகாரம் தொடர்பிலான குற்றவியல் விசாரணைக்கான வழக்குக் கோவை விசாரணைக்கு வந்த போது இதனை அறிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளதால், இவ்வழக்கை வாபஸ் பெறுவதாக சி.ஐ.டி.யினர் அறிவித்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிவான் கேமிந்த பெரேரா வழக்கை வாபஸ் பெற அனுமதித்தார்.
முன்னதாக , முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மீன் பிடி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் 8 கப்பல்களை தருவித்தமை மற்றும் முகத்துவாரம் மீன் பிடித் துறைமுகம் குத்தகைக்கு விடப்பட்ட விவகாரம் தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறி, சி.ஐ.டி. கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
கொழும்பு 7, பெளத்தாலோக்க மாவத்தையில் வசிக்கும், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா இது குறித்த முறைப்பாட்டை சி.ஐ.டி.க்கு அளித்திருந்த நிலையில், அதனை மையப்படுத்தி இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தனர்.
முன்னாள் மீன் பிடித் துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் இணைப்புச் செயலராக கடமையாற்றிய தொன் லலித் அனுராத செனவிரத்ன எனும் நபரின் பெயரில் இந்த 8 கப்பல்களும் சீன நிறுவனம் ஒன்றுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றுக்கு அமைய இந் நாட்டுக்கு தருவிக்கப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள்தாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடி நடவடைக்கைகளை முன்னெடுக்க ஒரு நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள கொள்ளளவில் 50 சதவீதத்தை மட்டுமே இலங்கை பயன்படுத்துவதாகவும், இவ்வறு மீனவர்களின் உரிமைகளை பலாத்காரமாக கைப்பற்றி, சீன நிறுவனத்திற்கு அந்த உரிமையை குத்தகைக்கு விட்டு, தரகுப் பணத்தை பெற்றுக்கொள்ளும் வண்ணம் அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிக்கையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM