அமைச்சர்களுக்கு புதிய விதி : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்

Published By: Digital Desk 3

26 Jul, 2022 | 03:03 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு புதிய விதிகளை வித்துள்ளார். 

அத்தியாவசிய காரணிகள் தவிர்த்து அமைச்சர்கள் எவரும் பாராளுமன்ற அமர்வுகளை தவிர்க்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சகல அமைச்சர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (26) இடம்பெற்ற போது , அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன ஜனாதிபதியின் இந்த ஆலோசனை தொடர்பில் தெளிவுபடுத்தினார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

எதிர்க்கட்சிகள் மற்றும் பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் அனைத்து நாட்களிலும் சகல அமைச்சர்களும் அவற்றில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கினார். 

அதே போன்று அமைச்சர்களிடத்தில் சபையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சபைமுதல்வர் பதிலளிக்காமல் , விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களே பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

எனவே எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தினுள் எழுப்பப்படும் கேள்விகளுக்கு குறித்த காலப்பகுதிக்குள் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் அந்தந்த அமைச்சர்களால் பதிலளிக்கப்படும். அதற்கமை உயர் ஒழுக்கத்துடன் பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆளுந்தரப்பினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49
news-image

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

2026-05-16 12:59:04
news-image

ரயில் விபத்து : தண்டவாள ஆணிகளை...

2026-05-16 12:46:55
news-image

பாரம்பரிய நாகரிகத்துடன் அபிவிருத்தி இணையும்போது மட்டுமே...

2026-05-16 12:36:54
news-image

பேராதனை பாலத்தின் கட்டுமானப் பணிகள் 4...

2026-05-16 12:04:14
news-image

பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு...

2026-05-16 11:35:00
news-image

உலக செஸ் சம்மேளன தலைவர் இலங்கைக்கு...

2026-05-16 11:30:35
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை...

2026-05-16 11:08:52
news-image

வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல்...

2026-05-16 11:14:55
news-image

முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞனின் சடலம்!

2026-05-16 10:38:47
news-image

நாட்டின் இரு வேறு பகுதிகளில் விபத்துக்கள்...

2026-05-16 12:16:58
news-image

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வீட்டுத்திட்டத்துக்காக ஒதுக்கப்படும்...

2026-05-16 10:27:02