நிலவுகின்ற பொரளாதார நெருக்கடியானது மனிதாபிமான அவசரநிலையினை தோற்றுவித்து, மக்களின் வாழ்வாதாரங்களை இல்லாதொழிக்கின்றது.
குடும்பங்களின் வருமானத்தின் மீதும் அவர்களது உணவுப் பாதுகாப்பு மீதும்; தாக்கங்களை மோசமடையச் செய்துள்ளது.
அவசரநிலைக்கு உடனடியாக செவிசாய்த்து, “Duluduu Divi Saviya” என்ற நாடளாவிய மனிதாபிமான திட்டத்தை மே தொடக்கத்தில் LOLC தொடங்கிவைத்தது. இக்கருத்திட்டத்தின் முதல் கட்டம், ஒரு மாத காலப்பகுதியினுள் அனைத்து 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி வறுமையான குடும்பங்களுக்கு ஆதரவளித்தது.
ஏற்கனவே வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற வாழ்வாதார இழப்பு, உணவுப் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய பொட்களின் விலை என்பன மூலம் பாரிய இன்னல்களை எதிர்கொண்டுள்ள நாடு முழுவதுமுள்ள மில்லியன் கணக்கான மக்களை மேலும் கண்டுபிடிப்பதற்கும் இது LOLC நிறுவனத்தை இயலச்செய்தது.
திவி சவிய கட்டம் இரண்டு, இரத்மலானை புராண ரஜமஹா விகாரையில் 2022 ஜூலை 07 அன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
LOLC Holding PLC குழுமப் பணிப்பாளர்ஃபிரதம நிறைவேற்று அதிகாரி கபில ஜயவர்த்தன, LOLC Holding PLC பிரதம தொழிற்படுத்தல் அலுவலர் கித்சிறி குணவர்த்தன, கொழும்பு மாவட்டச் செயலாளர் ஜாலிய யசரத்ன, இரத்மலானை பிரதேச செயலாளர் ஹிமாலி கருணாரத்ன, நியுஸ் பெஸ்ட் பணிப்பாளர் ரொஷான் வட்டவல, நியுஸ் பெஸ்ட் பொது முகாமையாளர் யசரத் கமலசிறி, LOLC குழுமத்தின் முக்கிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அத்துடன் MTV/ MBC வலையமைப்பின் அலுவலர்கள் மற்றும் ஏனைய நலன்விரும்பிகள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM