'த பாங்கர்’ இதழால் 2022ஆம் ஆண்டின் உலகின் ஆகச்சிறந்த 1000 வங்கிகளுள் இலங்கை வங்கிக்கு உயரிய இடம்!

26 Jul, 2022 | 02:18 PM
image

இலங்கையின் முதற்தர வங்கியியல் வணிக நாமமான இலங்கை வங்கி, உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளுள் ஒன்றாக மீண்டும் ஒருமுறை தரப்படுத்தப்பட்டுள்ளதோடு கடந்த ஆண்டைவிட 53 இடங்கள் முன்னேறி 800ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

முக்கியமாக வலுவான மூலதனம் காரணமாக ஐக்கிய இராச்சியத்தின் ‘த பாங்கர்’ இதழின் பட்டியலில் வங்கி பிடித்துள்ள இடம் அதன் மூலதனம், சொத்துத் தளம் என்பவற்றின் பலத்தை மீள உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதோடு கடந்த ஆண்டு டீசயனெ குiயெnஉந நிறுவனத்தாரால் இலங்கையின் முதற்தர வங்கியாக தெரிவுசெய்யப்பட்டமையின் பொருத்தப்பாட்டையும் உறுதிப்படுத்துகிறது. 

உலகெங்கிலும் உள்ள 5000இற்கும் மேற்பட்ட வங்கி நிறுவனங்களின் தரவுத்தளத்திலிருந்து ஆண்டுதோறும் தொகுக்கப்படும் ‘த பாங்கர்’ இதழின் உலகின் ஆகச்சிறந்த 1000 வங்கிகளின் பட்டியலானது உலகளவில் ஒரு வங்கியின் தரநிலையைத் தெளிவாக அறிந்துகொள்வதற்கான வழிகாட்டியாகக் கருதப்படுகிறது.

இலங்கை வங்கியின் தலைவர் திரு. காஞ்சன ரத்வத்த இது குறித்துத் தெரிவிக்கையில், 

‘இந்நெருக்கடிமிகு சூழலில் பல சவால்களைக் கடந்து வங்கி ஆற்றிய அரும்பணி வங்கியின் செயற்திறனையும் இலங்கையின் வங்கித் துறையில் முன்னணி வங்கியாக அதன் வகிபாகத்தையும் தெளிவாகக் காட்டுகின்றது. இந்த உலகளாவிய அங்கீகாரம் குறித்தும் எமது இச்சாதனை குறித்தும் பெருமை கொள்ளும்  அருகதை எமக்குள்ளது’ என்றார்.

குழுமத்தின் இடைக்கால நிதி அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, 4 டிரில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட சொத்துக்களையும் 3 டிரில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட வைப்புகளையும் கொண்டுள்ள முதல் உள்நாட்டு வங்கி இலங்கை வங்கியாகும்.

இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் திரு. கே.ஈ.டி. சுமணசிறி,

 “இலங்கை வங்கியையே தமது ஆஸ்தான நிதிச் சேவை வழங்குநராகத் தெரிவுசெய்து கடந்த எட்டு தசாப்த காலமாக நாம் ஈட்டிவரும் வெற்றிகளுக்குக் காலாக இருந்துவரும் எமது வாடிக்கையாளர்களுக்கு எமது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்வதோடு நாட்டு மக்கள் அனைவருக்குமான புத்தாக்கமிகு வங்கிச் சேவையைத் தொடர்ந்தும் வழங்குவோம்’ என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57