அவுஸ்திரேலியாவில் கொவிட்டினால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முன்னர் எப்போதையும் விட அதிகம்

Published By: Rajeeban

26 Jul, 2022 | 12:20 PM
image

அவுஸ்திரேலியாவில் 2022 ஆரம்பத்தில் கொவிட் உச்சநிலையில்  காணப்பட்டவேளை மருத்துவமனைகளில் காணப்பட்ட நோயாளர்களை விட அதிகளவான கொவிட் நோயாளர்கள் தற்போது மருத்துவமனையில் காணப்படுகின்றனர் என சுகாதார திணைக்கள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

திங்கட்கிழமை மருத்துவமனைகளில் 5433 கொவிட் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர் இது ஜனவரியில் காணப்பட்ட 5391 நோயாளர்கள் எண்ணிக்கையை விட அதிகம்.

ஒமிக்ரோனின் துணைவகைகளின் பரவலே கொவிட் காரணமாக அதிகளவானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கு காரணம்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற அதேவேளை தீவிரகிசிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றது.

ஜனவரியில் 425 பேர் தீவிரகிசிச்சைபிரிவுகளில் காணப்பட்டனர் ஆனால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 166 பேரே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைரசின் தன்மை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை மற்றும் சிகிச்சைகள் காரணமாகவே நோயாளர்கள் தீவிரகிசிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படுவது குறைவாக காணப்படுகின்றது என அவுஸ்திரேலிய மருத்துவ சங்கத்தின் துணை தலைவர் கிறிஸ்மொய் தெரிவித்துள்ளார்.

ஆனால் குறைந்த எண்ணிக்கையானவர்கள்  தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதை சிறந்த அறிகுறியாக கருதக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52