(இராஜதுரை ஹஷான்)
கொவிட் பெருந்தொற்று 2019 ஆம் ஆண்டு முதல் இன்று வரை முழு உலகையும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதுடன், அரசியல் ரீதியிலான மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதற்கு கொவிட் பெருந்தொற்று பரவல் பிரதான காரணியாக உள்ளது.
கொவிட் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் தளவர்வடைந்து வரும் நிலையில் தற்போது உலக சுகாதார தாபனம் குரங்கம்மை பாதிப்பை 'பொது சுகாதார அவசர நிலையாக ' அறிவித்துள்ளது.
உலக அளவில் குரங்கம்மை பாதிப்பு தீவிரமாக பரவலடைவதை தொடர்ந்து இதனை உயரிய எச்சரிக்கையுடன் இருக்கும் நோய் பாதிப்பாக உலக சுகாதார தாபனம் வகைப்படுத்தியுள்ளது.
தொற்று நோய்கள் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது அவசர கூட்டம் அண்மையில் இடம்பெற்றது. பல்வேறுப்பட்ட ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு குரங்கம்மை நோய் பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் இதுவரை 75 இற்கும் அதிகமான நாடுகளில் 16,000 இற்கும் அதிகமானோர் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார தாபனம் அறிவித்துள்ளது.
இத்தாலி,ஸ்பெயின்,போர்த்துக்கல்,அமெரிக்கா,பிரிட்டன்,இந்தியா ஆகிய நாடுகளில் குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் தொலைதூர பகுதிகளில் குரங்கம்மை பாதிப்பு மிகவும் சாதாரணமானதாக கருதப்படுகிறது.குரங்கம்மை என்பது ஒரு வைரஸ் தொற்றாகும்.இந்த வைரஸ் தொற்று உண்டாவது மிகவும் அரிதானது.
குரங்கம்மை தொற்று ஒருவரிடமிருந்து பிறிதொருவருக்கு எளிதில் பரவாது.குரங்கம்மை பாதிப்புக்கு என்று தனியாக் தடுப்பூசி இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை.மேற்கு ஆபிரிக்க வகை மத்திய ஆபிரிக்க என்று குரங்கம்மை வைரஸ்களில் இரண்டு வகைகள் உள்ளன.
குரங்கம்மை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவருக்க ஆரம்பக்கட்டத்தில் காய்ச்சல், தலைவலி,வீக்கம்,முதுகு வலி,தசை வலி,உடல் சோர்வு ஆகிய அறிகுறிகள் காணப்படும்.காய்ச்சல் ஏற்பட்டதும் உடலில் தடிப்புகள் ஏற்படும்.இவை பெரும்பாலும் முகத்தில் ஏற்படும்.சிறிய தடிப்புக்கள் பொதுவாக உள்ளங்கை மற்றும் பாதங்களில் ஏற்படும்.
குரங்கம்மை நோய் பாலியல் ரீதியாக பரவும் நோய் என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை இருப்பினும் இது உடலுறவின் போது ஒருவருடன் ஒருவர் உடல் ரீதியாக நெருக்கமான தொடர்பில் இருந்தால் பரவலடையும் என ஆரம்பக்கட்ட ஆய்வுகள் ஊடாக குறிப்பிடப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM